சோகிப் மாலிக் குறித்த கேள்விக்கு ரொமான்டிக் பதிலளித்த சானியா மிர்சா..!

சோகிப் மாலிக் குறித்த கேள்விக்கு ரொமான்டிக் பதிலளித்த சானியா மிர்சா..!
சோகிப் மாலிக் - சானியா மிர்சா
  • Share this:
சோகிப் மாலிக்கை பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்ற ட்விட்டர் பதிவிற்கு சானியா மிர்சா ரொமான்டிக்காக பதிலளித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வீட்டிலேயே இருப்பவர்கள் பலர் இணையத்தில் தான் பொழுதை கழித்து வருகின்றனர். இதனால் பிரபலங்கள் பலர் இணையத்தில் தங்களது கருத்துகளையும், புகைப்டங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோகிப் மாலிக் அந்நாட்டில் நடைபெறும் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் அணிக்காக விளையாடி வருகிறார். பெஷாவர் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் சோகிப் மாலிக்கின் புகைப்படத்தை பதிவிட்டு இவரை பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று பதிவிட்டிருந்தது.


பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் சோகிப் மாலிக் குறித்து தங்களது கருத்துகளை பதிவிட்டு வந்த நிலையில் சானியா மிர்சா பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது. சோகிப் மாலிக் குறித்த பதிவிற்கு சானியா மிர்சா ஹேண்ட்சம்(Handsmome) என்று பதிவிட்டுள்ளார்.



சானியா மிர்சா, சோகிப் மாலிக் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
First published: March 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்