Home » News » Sports » SHOAIB AKHTAR SAYS HE WOULD HAVE KILLED WASIM AKRAM IF HE HAD ASKED HIM TO FIX 1 MATCHES VJR

வாசிம் அக்ரம் சூதாட்டத்துக்கு அழைத்திருந்தால் அவரை கொன்றிருப்பேன்- ஷோயப் அக்தர்

தொடக்க வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தி பதற்றமின்றி பல போட்டிகளில் என்னை பந்துவீச வைத்துள்ளார்.

வாசிம் அக்ரம் சூதாட்டத்துக்கு அழைத்திருந்தால் அவரை கொன்றிருப்பேன்- ஷோயப் அக்தர்
வாசிம் அக்ரம் - ஷோயப் அக்தர்
  • Share this:
வாசிம் அக்ரம் தன்னை மேட்ச் பிக்ஸிங் செய்யச் சொல்லி அழைத்திருந்தால் அவரை கொன்றிருப்பேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.

'ராவல்பண்டி எக்ஸ்பிரஸ்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுவார் ஷோயப் அக்தர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “வாசிம் அக்ரம் மிகவும் சிறப்பான பந்து வீச்சாளர். பாகிஸ்தானின் நெருக்கடியான போட்டிகளில் அவர் அபாரமாக பந்துவீசி ஜெயிக்க வைத்துள்ளார். அவருடன் 8 ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அவர் என்னை மேட்ச் பிக்ஸிங் செய்ய சொல்லி அணுகி இருந்தால் அவரை கொன்று இருப்பேன். ஆனால் அவர் அப்படி என்னிடம் எதை சொன்னதில்லை.

தொடக்க வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தி பதற்றமின்றி பல போட்டிகளில் என்னை பந்துவீச வைத்துள்ளார். எனக்காக கடைசியாக விளையாட வரும் வீரர்களை மிச்சம் வைப்பார். என்னை என் விருப்பத்திற்கு ஏற்றவாறு பந்து வீச அனுமதிப்பார். என்னை விட அதிக விக்கெட்களை வீழ்த்திய அனுபவசாலி வாசிம் அக்ரம்“ என்றார்.








First published: April 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading