இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் பயணித்த கார் சாலையின் டிவைடரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளனானது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. உத்தர்கண்ட் மாநிலத்தில் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயங்களுடன் ரிஷப் பண்ட் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Shikhar Dhawan gave Rishabh Pant right advice about driving. pic.twitter.com/XxFRE5K74j
— Ami ✨ (@kohlifanAmi) December 30, 2022
இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் டெல்லி அணியில் இடம்பெற்றிருந்தனர். அப்போது எனக்கு எதேனும் அறிவுரை கூறி விரும்பினால், என்ன சொல்வீர்கள் என ஷிகர் தவானிடம் ரிஷப் கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஷிகர், காரை கொஞ்சம் மெதுவாக ஓட்டுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car accident, Rishabh pant, Shikhar dhawan