முகப்பு /செய்தி /விளையாட்டு / உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வென்கலம் வென்ற மாரியப்பன் தங்கவேலு...!

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வென்கலம் வென்ற மாரியப்பன் தங்கவேலு...!

மாரியப்பன் தங்கவேலு (கோப்புப்படம்)

மாரியப்பன் தங்கவேலு (கோப்புப்படம்)

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

துபாயில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்றார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு, கடந்த 2016-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.

தற்போது துபாயில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்துவரும் நிலையில், உயரம் தாண்டுதல் போட்டியில், 1.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றுள்ள மாரியப்பன், 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்க உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதேபோட்டியில்,1.83 மீட்டர் உயரம் தாண்டிய மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றார். இவரும் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்க உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

First published:

Tags: Mariyappan Thangavelu, Olympic 2020