ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தொப்பியை ஏலம் விட்டு 1 மில்லியன் டாலர் நிதி திரட்டிய ஷேன் வார்ன்..!

தொப்பியை ஏலம் விட்டு 1 மில்லியன் டாலர் நிதி திரட்டிய ஷேன் வார்ன்..!

ஷேன் வார்ன்

ஷேன் வார்ன்

இதுவரையில் தான் பங்கேற்ற 145 டெஸ்ட் போட்டிகளில் சுமார் 700 விக்கெட்டுகள் எடுக்க உதவிய தொப்பியை ஏலம் விடுவதாக ஷேன் வார்ன் தெரிவித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரண நிதியாக சுமார் 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் தொகையை தனது தொப்பியை ஏலம் விட்டு ஈட்டியுள்ளார் ஷேன் வார்ன்.

ஆஸ்திரேலிய நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷேன் வார்ன் ஆஸ்திரேலிய காட்டுத்தீ சம்பவத்துக்கு நிவாரண நிதி திரட்டியுள்ளார். இதற்காக தனது பச்சை நிற தொப்பியை ஏலம் விடுவதாக அறிவித்தார். இதுவரையில் தான் பங்கேற்ற 145 டெஸ்ட் போட்டிகளில் சுமார் 700 விக்கெட்டுகள் எடுக்க உதவிய தொப்பியை ஏலம் விடுவதாக ஷேன் வார்ன் தெரிவித்தார்.

சிறப்பான வரவேற்பால் மெய்சிலிர்த்த ஷேன் வார்ன், “மிகவும் அதிகத் தொகைக்கு ஏலம் எடுத்த நபருக்கு எனது நன்றிகள். உங்களது பெருந்தன்மையால் என்னை வீழ்த்திவிட்டீர்கள். எனது எதிர்பார்ப்புகளை எல்லாம் கடந்த ஒரு செயல் இது.

இந்தப் பணம் முழுவதும் அப்படியே காட்டுத்தீக்கான நிவாரண நிதியாக செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கப்படும். அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார் ஷேன் வார்ன்.

மேலும் பார்க்க: காலநிலை மாற்றத்தால் அழிவை நோக்கி ஒரு இந்தியத் தீவு..!

First published:

Tags: Shane Warne, Wildfires