ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் (52) மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக அவர் உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மாயாஜல சுழற்பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தவர். ஷேன் வார்ன் ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார்.
ஷேன் வார்ன் ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 194 ஒரு நாள் போட்டிகளில் 293 போட்டிகளை விளையாடி உள்ளார்.
Also Read : 100-வது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை
மேலும் 55 ஐபிஎல் போட்டிகளிலும் ஷேன் வார்ன் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் வெற்றி கோப்பையை தட்டி சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஷேன் வார்ன் தான் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
ஷேன் வார்ன் மரணத்தை உறுதி செய்த அவரது நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,' ஷேன் வார்ன், மாரடைப்பால் உயிரிழந்திருக்காலம். அவர், தாய்லாந்தின் கோ சாமுய் நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். அங்கு துாக்கத்தில் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தாகவும், மருத்துவ நிபுணர்கள் முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, ஷேன் வார்ன் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்று ஒருபுறம் கருதப்பட்டாலும், அவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கடந்த பிப்ரவரி 28ம் தேதியன்று ஷேன் வார்ன் தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் மிக சிறப்பான உடற்கட்டுடனும் உள்ள தனது பழைய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
அத்தோடு, சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அந்த உடற்கட்டமைப்பை குறிப்பிட்டு, ஜூலை மாதத்திற்குள் உடல் எடையை குறைத்து இதே நிலைமைக்கு திரும்பப்போகிறேன். அதற்கான முயற்சியை தொடங்கியுள்ளேன் என தெரிவித்திருந்தார்.
பொதுவாக பிரபலங்கள், நட்சத்திரங்கள் உடல் எடையை உடனடியாக குறைப்பதற்காக ஸ்டெராய்டுகள் பயன்படுத்துவது, பல்வேறு மருந்துகள், சிகிச்சை முறைகளை பின்பற்றுவது, குறுகிய காலத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், உடனடியாக உடல் எடையை குறைக்க ஷேன் வார்ன் மேற்கொண்ட எதோனும் முயற்சியே அவரது உயிரை பறித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், அவரது மரணத்திற்கு 4 நாட்களுக்கு முன்பு, ஷேன் வார்ன் தான் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறி பதிவிட்டுள்ள அந்த ட்வீட்டர் பதிவு தற்போது, சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.