அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்!

Vijay R | news18-tamil
Updated: September 6, 2019, 2:30 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்!
செரீனா வில்லியம்ஸ்
Vijay R | news18-tamil
Updated: September 6, 2019, 2:30 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு நட்சத்திர வீரங்கனையான செரீனா வில்லியம்ஸ் 10-வது முறையாக முன்னேறி உள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் அரையிறுதி சுற்றில் செரீனா வில்லியம்ஸ் - விட்டோலினா பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த போட்டியில் 6-3, 6-1 என்ற நேர்செட் கணக்கில் விட்டோலினாவை எளிதாக வென்று செரீனா இறுதி போட்டிக்கு முன்னேறினார்.


அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் ஆண்டரீஸ்கு - செரீனா வில்லியம்ஸ் மோத உள்ளனர். இறுதி போட்டியில் செரீனா வெற்றி பெற்றால் 7வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்லுவார். மேலும் 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகவும் இது இருக்கும்.

Also Watch: 74 வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்!

First published: September 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...