நடுவருடன் வாக்குவாதம்: செரீனா வில்லியம்சுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு

news18
Updated: September 10, 2018, 8:34 AM IST
நடுவருடன் வாக்குவாதம்: செரீனா வில்லியம்சுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு
செரீனா
news18
Updated: September 10, 2018, 8:34 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா வில்லியம்சுக்கு, அமெரிக்க டென்னிஸ் சங்கம் ரூ. 12 ,00,000 அபராதம் விதித்துள்ளது.

நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், 20 வயதான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவிடம் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் செரினா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார். இதன்மூலம் முதன் முறையாக ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

இந்நிலையில், போட்டி முடிந்தவுடன் அவருடன் கைகுலுக்க மறுத்த செரீனா வில்லியம்ஸ், நடுவரை பார்த்து திருடன் எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து மூன்று முறை விதிமுறைகளை மீறியதற்காக, அவர் மீது நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்து, புள்ளிகளை குறைத்தார். போட்டியில் பட்டத்தை பறிகொடுத்த செரீனா வில்லியம்ஸ், நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், விதிமுறைகளை மீறியது மற்றும் நடுவரை நோக்கி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக அவருக்கு            ரூ.12, 00,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய செரீனா வில்லியம்சுக்கு 13 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.
First published: September 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்