'டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை' - செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு

செரீனா வில்லியம்ஸ்

39 வயதான செரீனா வில்லியம்ஸ், ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவராவார்.

 • Share this:
  பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

  ஏற்கனவே டென்னிஸ் பிரபலங்களான ரஃபேல் நடால் உடல்நிலையை காரணம் காட்டியும், ஆஸ்திரேலிய வீரர் டாமினிக் தீமும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று கூறியுள்ளார். 39 வயதான செரீனா வில்லியம்ஸ், ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவராவார்.

  மேலும் சிட்னி, பெய்ஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளிலும் சகோதரி வீனஸ் வில்லியம்சுடன் இணைந்து 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த செரீனாவின் ரசிகர்கள், திடீர் அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: