அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதி போட்டிக்கு 3-வது முறையாக முன்னேறியுள்ளார் விக்டோரியா அஸரென்கா.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி
செரீனா வில்லியம்ஸ்
  • News18 Tamil
  • Last Updated: September 11, 2020, 2:16 PM IST
  • Share this:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

நியூயார்க்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய செரீனா முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து சுதாரித்துக் கொண்டு விளையாடிய அஸரென்கா அடுத்தடுத்த இரு சுற்றுகளையும் 6-3, 6-3 என்ற கணக்கில் தன்வசப்படுத்தி இறுதி போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.


இதன்மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதி போட்டிக்கு 3-வது முறையாக முன்னேறியுள்ளார். இறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன் நயோமி ஒசாகாவுடன் அஸரென்கா பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading