முகப்பு /செய்தி /விளையாட்டு / ரிட்டையர்மெண்ட் கிளப்புக்கு பெடரரை வரவேற்று செரீனா உருக்கம்

ரிட்டையர்மெண்ட் கிளப்புக்கு பெடரரை வரவேற்று செரீனா உருக்கம்

ரோஜர் ஃபெடர்

ரோஜர் ஃபெடர்

பெடரர் 41 வயதில் ஓய்வு அறிவித்துள்ள நிலையில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Interna, Indiaswitzerlandswitzerland

சுவிட்சர்லாந்து டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு அறிவித்ததையடுத்து சமீபத்தில் ஓய்வு பெற்ற நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரோஜர் பெடரரை ரிட்டையர்மெண்ட் கிளப்புக்கு வரவேற்றுள்ளார்.

செரீனா 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார், பெடரர் 41 வயதில் ஓய்வு அறிவித்துள்ள நிலையில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

செரீனா வில்லியம்ஸ் தன் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில், “இதனைச் சொல்ல நான் ஒரு துல்லிய வழியைக் கண்டுப்பிடிக்க விரும்பினேன். ஆனால் நீங்கள் உங்கள் கரியரை எப்படி வைத்திருந்தீர்களோ அதே போல் ஆட்டத்திற்கு ஓய்வு கொடுப்பதையும் சொல்லாற்றலுடன் வெளிப்படுத்தி விட்டீர்கள்.
 
View this post on Instagram

 

A post shared by Serena Williams (@serenawilliams)நம் பாதை ஏறக்குறைய ஒன்றுதான். பெரும்பாலும் ஒன்றுதான். என்னையும் சேர்த்து  எண்ணற்ற லட்சக்கணக்கனோரை நீங்கள் தாக்கம் செலுத்தியுள்ளீர்கள், அகத்தூண்டுதலாக இருந்துள்ளீர்கள். நாங்கள் உங்களை மறக்க மாட்டோம்.

உங்களுக்காக கரகோஷம் செய்கிறேன். எதிர்காலத்தில் நீங்கள் என்னச் செய்யப்போகிறீர்கள் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ரிட்டையர்மெண்ட் கிளப்புக்கு வரவேற்கிறேன். நீங்களாய் இருப்பதற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Retirement, Roger Federer, Serena Williams, Tennis