கொரோனா விழிப்புணர்வு : வித்தியாசமான கெட்டப்பில் பிரபல பாகிஸ்தான் வீரர் ட்வீட்

கொரோனா விழிப்புணர்வு : வித்தியாசமான கெட்டப்பில் பிரபல பாகிஸ்தான் வீரர் ட்வீட்
சக்லைன் முஸ்தாக்
  • Share this:
பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸை தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை எடுத்து வருகிறது. கிரிக்கெட் பிரபலங்கள் வீட்டில் இருங்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென சமூக வலைதளங்கள் வாயிலாக அறுவுறுத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக் கொரோனா விழிப்புணர்வு குறித்து வித்தியாசமான கெட்டப்பில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். பிங்க் கலர் விக் மற்றும் நீல நிறத்தில் ’ஐ ஷேடோ’, ’லிப்ஸ்டிக்’ என்று அவர் மேக்கப் செய்துள்ளார்.




இந்த சேட்டைகளுக்கு காரணம் அவரது மகள் தான் என்பது அந்த வீடியோவில் தெரிய வருகிறது. அவரது மகள் தான் தனக்கு இந்த மேக்கப்-ஐ வலுக்கட்டாயமாக போட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதல் முதல்முறை அல்ல, இதற்கு முன்பும் இதுபோன்று அவர் மேக்கப் போட்டு மகிழ்ந்ததாக கூறியுள்ளார்.

மேலும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், உங்கள் அன்புக்குரியவர்கள் உடன் இருங்கள் என்றும் இந்த வீடியோவை பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். சக்லைன் முஸ்தாக்கின் இந்த வீடியோவிற்கு பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




 
First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading