ஜடேஜாவின் ஆட்டம் குறித்து சர்ச்சை கருத்திட்ட சஞ்சய் மஞ்ச்ரேகர்.. வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்
ஜடேஜாவின் ஆட்டம் குறித்து சர்ச்சை கருத்திட்ட சஞ்சய் மஞ்ச்ரேகரை நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.

சஞ்சய் மஞ்ச்ரேகர்
- News18 Tamil
- Last Updated: December 3, 2020, 8:41 PM IST
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசிப் போட்டி கான்பெர்ராவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. விராட் கோலி அரைச்சதம் அடித்தாலும் தவான்,கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் சொற்ப ரன்களில் வெளியேற, இந்தியா 32 ஓவர்களில் 152 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 6-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஹர்திக் பாண்டியா 92 ரன்களும், ஜடேஜா 66 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 150 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 6-வது விக்கெட்டுக்கு அல்லது லோ ஆர்டரில் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையைப் படைத்துள்ளது. இவர்கள் 108 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 150 ரன்களைக் குவித்தனர். இது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 6வது விக்கெட்டில் ஒரு பார்ட்னர்ஷிப் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்பு, 1999 -ஆம் ஆண்டு ராபின் சிங் மற்றும் சதகோபன் ரமேஷ் பார்ட்னர்ஷிப் எடுத்த 123 ரன்களே அதிகபட்ச ரன்களாக இருந்தது. இதன்மூலம், 21 வருடச் சாதனையானது ஹர்திக் பாண்டியா-ஜடேஜா ஜோடியால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேகர் உட்பட ஏராளமானோர் ட்வீட் செய்துள்ளனர். அவற்றில் சில:
Manjrekar when Jadeja peaks #INDvsAUS pic.twitter.com/Co2fGruDO1
— InGenious (@Bees_Kut) December 2, 2020
Ravindra Jadeja's trademark sword celebration with Sanjay Manjrekar in the commentary box. pic.twitter.com/4P9ByHa4B0
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 2, 2020
Cricket Twitter vs @sanjaymanjrekar right now pic.twitter.com/e4Iw4il6VR
— Sagar (@sagarcasm) December 2, 2020
Sanjay Manjrekar before the series: "I wouldn't have Ravindra Jadeja and Hardik Pandya in my ODI team."
3rd ODI: both put on 150 runs for 6th wicket and played excellent individual knocks.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 2, 2020
Sanjay Manjrekar on commentary when Jadeja hits Abbott all over the park#INDvsAUS pic.twitter.com/vMRyvuKQ51
— Ajay Sharma (@Ajayes09) December 2, 2020
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. இந்த ஒரு நாள் போட்டிகள் குறித்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், 'எனக்கு ஜடேஜாவுடன் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஜடேஜா போன்ற வீரர்கள் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக ஆடக் கூடியவர்கள் அல்ல. அவரைப் போன்ற வீரர்கள் இதுபோன்றதொரு போட்டிகளில் களமிறங்கக் கூடாது. அதே வேளையில் டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா ஒரு சிறந்த வீரர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றார். நான் ஹர்திக் பாண்டியாவைக் கூட ஆடும் லெவனில் களமிறக்க வேண்டாம் என்றுதான் சொல்லுவேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், தென்னாப்பிரிக்கா மற்றும் IPL-க்கு எதிரான இந்தியாவின் தொடரில் BCCI-யின் வர்ணனைக் குழுவில் இருந்து மஞ்ச்ரேகர் விலக்கப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வர்ணனையாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 2019 உலகக் கோப்பையின்போது அளித்த பேட்டியில், மஞ்ச்ரேகர் ஒரு சர்ச்சையைத் கிளப்பினார் . இதனால் ட்விட்டரில் அடிக்கடி இருவரும் சண்டையிடுவது வழக்கமாகியுள்ளது.
Still i have played twice the number of matches you have played and i m still playing. Learn to respect ppl who have achieved.i have heard enough of your verbal diarrhoea.@sanjaymanjrekar
— Ravindrasinh jadeja (@imjadeja) July 3, 2019
இந்நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஜடேஜா மற்றும் பாண்டியா குறித்து தெரிவித்த கருத்து ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தது. சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்து கிரிக்கெட் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்ட ரவீந்திர ஜடேஜா, 'அமைதியாக இருக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். சஞ்சய் மஞ்ச்ரேக்கரைக் குறிப்பிட்டுத்தான் அப்படி அவர் ட்வீட் செய்திருக்க வேண்டும் என ரசிகர்கள் அந்த பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்