உணவின்றி தவித்த மக்களுக்கு ₹1.25 கோடி நிதி திரட்டிய சானியா மிர்சா

உணவின்றி தவித்த மக்களுக்கு ₹1.25 கோடி நிதி திரட்டிய சானியா மிர்சா
சானியா மிர்சா
  • Share this:
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ள நிலையில் உணவின்றி தவிக்கும் சுமார் 1 லட்சம் மக்களுக்கு சானியா மிர்சா ₹1.25 கோடி நிதி திரட்டி உதவி உள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலார்கள் உட்பட பலர் தங்களது வாழ்வாதரத்தை இழந்து உள்ளனர்.

இக்கட்டான இந்த சூழலில் உணவின்றி தவிக்கும் பலருக்கு தன்னர்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பலர் உதவிகரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் உணவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் இல்லாமல் தவிக்கும் சுமார் 1000 குடும்பங்களுக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ₹1.25 கோடி நிதி திரட்டி உதவி உள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த வாரம் நாங்கள் ஒரு குழு அமைத்து மக்களின் தேவை அறிந்து அதை செய்து தருகிறோம். நாங்கள் 1000 குடும்பத்தினருக்கு உணவளித்துள்ளோம். 1 லட்சம் மக்களுக்கு ₹1.25 கேடி நிதி திரட்டினோம்“ என்று பதிவிட்டுள்ளார்.



கொரோனாவிற்காக நாட்டு மக்கள் தங்களால் முயன்ற உதவியை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்தார். அதைதொடர்ந்து பலர் தங்களால் முயன்ற உதவியை செய்து வருகின்றனர்.









சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: March 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading