பாகிஸ்தான் மருமகளான சானியாவை நீக்குக: பா.ஜ.க எம்.எல்.ஏ கோரிக்கை!

#SaniaMirza is ‘Pakistan ki bahu’, oust her as Telangana ambassador: BJP MLA #RajaSingh | தூதுவராக உள்ளூர் வீரர், வீராங்கனைகளான விவிஎஸ். லக்‌ஷ்மன், பி.வி.சிந்து, சாய்னாவை நியமியுங்கள்: பாஜக எம்.எல்.ஏ

பாகிஸ்தான் மருமகளான சானியாவை நீக்குக: பா.ஜ.க எம்.எல்.ஏ கோரிக்கை!
சானியா மிர்சா மற்றும் ராஜா சிங்.
  • News18
  • Last Updated: February 18, 2019, 7:10 PM IST
  • Share this:
பாகிஸ்தானின் மருமகளான சானியா மிர்சாவை உடனடியாக தெலுங்கானா மாநிலத்தின் தூதுவர் பதவியில் இருந்து நீக்குமாறு முதல்வர் சந்திரசேகர் ராவிற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தீவிரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகின்றனர்.

தீவிரவாத தாக்குதலுக்கு மத்திய, மாநில அரசுகளும், அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கின் மனைவியும், இந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சா எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்று சர்ச்சைகள் கிளம்பின.


இதனை அடுத்து, சானியா மிர்சா தனது ட்விட்டரில் நீண்ட விளக்கத்தில், “பிரபலங்கள் என்றாலே தங்கள் தேசப்பற்றைக் காட்ட ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தாக்குதலைக் கண்டித்து பதிவு செய்ய வேண்டும் என விரும்புபவர்களுக்கே இந்தப் பதிவு. உங்களுடைய வெறுப்பு மற்றும் கோபத்தை வேறெங்கும் காட்ட வாய்ப்பு கிடைக்காததால், எங்களை போன்ற பிரபலங்கள் மீது காட்டுகிறீர்கள். தீவிரவாத தாக்குதல்களை பொதுவெளியில் நான் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை,” என்று கூறியிருந்தார்.



இவரின் பதிவு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனைத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கோஷமஹால் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ராஜா சிங், அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவிற்கு புதிய கோரிக்கையை வைத்துள்ளார். அதில், “பாகிஸ்தானின் மறுமகளான சானியா மிர்சாவை உடனடியாக தெலுங்கானா மாநிலத்தின் தூதுவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும், “ தெலுங்கானாவின் தூதுவராக உள்ளூர் வீரர், வீராங்கனைகளான விவிஎஸ். லக்‌ஷ்மன், பி.வி.சிந்து, சாய்னா நேவாலை ஆகியோரில் யாரையாவது நியமிக்கவேண்டும்” என்றும் ராஜா சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

Raja singh, ராஜா சிங்
பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங். (Courtesy: Twitter/RajaSingh)


ஏற்கனவே, ராஜா சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வு அடிக்கடி நடைபெறும். தற்போது, இந்தியாவுக்காக விளையாடும் சானியா மிர்சாவை நீக்க வேண்டும் என புதிய சர்ச்சையை அவர் கிளப்பியுள்ளார்.

தீவிரவாதத்தை பொதுவெளியில் கண்டிக்கவேண்டிய அவசியமில்லை! - சானியா ட்வீட்டால் சர்ச்சை

Also Watch....

First published: February 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading