ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சானியா மிர்சா - சோயிப் மாலிக் தம்பதி பிரிவு? விவாகரத்து பெற்றதாகவும் தகவல்

சானியா மிர்சா - சோயிப் மாலிக் தம்பதி பிரிவு? விவாகரத்து பெற்றதாகவும் தகவல்

சானியா மிர்சா- சோயிப் மாலிக்

சானியா மிர்சா- சோயிப் மாலிக்

Sania Mirza Divorce: திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், இந்த தம்பதியிடையே விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, Indiapakistanpakistanpakistan

  டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் தம்பதியினர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் தம்பதிக்கு கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், இந்த தம்பதியிடையே விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

  சானியாவின்  இன்ஸ்டாகிராம் கணக்கில் சமீபத்திய  பதிவுகள் சிலவற்றின் படி, அவர்களின் திருமண நிலை சிக்கலில் இருப்பதை உறுதி செய்தது. இந்நிலையில், சானியா மிர்சா - சோயிப் மாலிக் தம்பதி அதிகாரப்பூர்வமாக பிரிந்துவிட்டதாக  இன்சைட் ஸ்போர்ட்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

  சோயிப் மாலிக்கிற்கு நெருக்கமான நபர் ஒருவர் அந்த ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “ஆம், அவர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதற்கு மேல் என்னால் வெளியிட முடியாது ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்” என்று கூறியுள்ளார்.

  தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விவாகரத்து குறித்து இந்த நட்சத்திர தம்பதியினர் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Divorce, Sania Mirza