Home /News /sports /

Sania Mirza | இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு அறிவிப்பு

Sania Mirza | இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு அறிவிப்பு

சானியா மிர்சா

சானியா மிர்சா

Saina Mirza Retire | சானியா கடைசியாக 2016 ஆஸ்திரேலிய ஓபனில் மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார்.

    இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன் 2022 மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் தோல்வியடைந்த பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியா ஓபன் 2022 தொடரிலர் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் 35 வயதான மிர்சா மற்றும் அவரது உக்ரைன் ஜோடி நதியா கிச்செனோக் 4-6, 6-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர். ஒரு மணி நேரம் 37 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா ஜோடி போராடி தோல்வியடைந்தது. இந்த போட்டியின் போது சானியா மிர்சாவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

    மெல்போர்னில் நடைபெற்ற போட்டிக்கு பின் சானியா மிர்சா செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் குணமடைய அதிக நேரம் எடுக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய இவ்வளவு நீண்டு நேர பயணம் செய்வதன் மூலம் எனது 3 வயது மகனை ஆபத்தில் ஆழ்த்துகிறேன். அதனுடன், நான் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று. என் உடல் சேர்வடைவது போல் உணர்கிறேன். இன்று என் முழங்கால் வலிக்கிறது, நாங்கள் இழந்ததற்கு இதுவே காரணம் என்று நான் சொல்லவில்லை, ஆனால் நான் வயதாகிவிட்டதால் குணமடைய நேரம் எடுக்கும் என்று நினைக்கிறேன். நான் இனி விளையாடப்போவதில்லை“ என்றார்.

    Also Read :  தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு.... இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்

    கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் இந்தியர் சானியா மிர்சா தான். சானியா கடைசியாக 2016 ஆஸ்திரேலிய ஓபனில் மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார். மேலும் அவர் பெண்கள் டென்னிஸில் மிகவும் வலிமையான இரட்டையர் ஜோடியை உருவாக்கினார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Tennis

    அடுத்த செய்தி