பேட்மிண்டன் போட்டியில் சாய்னாவுக்கு தங்கம்; பி.வி.சிந்துவுக்கு வெள்ளி

news18
Updated: April 15, 2018, 2:33 PM IST
பேட்மிண்டன் போட்டியில் சாய்னாவுக்கு தங்கம்; பி.வி.சிந்துவுக்கு வெள்ளி
சாய்னாவும், பி.வி.சிந்துவும்
news18
Updated: April 15, 2018, 2:33 PM IST
கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தங்கம் வென்று அசத்தினார். பி.வி.சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டியின் இறுதிநாளான இன்று மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் சாய்னாவும் பி.வி.சிந்துவும் பலப்பரீட்சை நடத்தினர்.

இந்தியர்கள் இருவரும் தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் மோதிக்கொண்டதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. குறிப்பாக சாய்னா நேவால் வழக்கத்திற்கு மாறாக தொடக்கம் முதலே ஆக்ரோஷத்துடன் செயல்பட்டு முதல் செட்டை 21-18 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் எழுச்சியுடன் விளையாடிய சிந்து, சாய்னாவிற்கு கடும் நெருக்கடி அளித்தார்.

தாங்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இருவரும் விளையாடி ரசிகர்களுக்கு விருந்தளித்தனர். இறுதியில் 23-21 என்ற கணக்கில் சாய்னா வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் அவர் வெல்லும் 2-வது தங்கம் இதுவாகும். கடுமையாக போராடிய சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
First published: April 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்