• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விளையாட்டின் ஆஸ்கர்... லாரியஸ் விருதை கைப்பற்றிய முதல் இந்தியர் சச்சின்!

விளையாட்டின் ஆஸ்கர்... லாரியஸ் விருதை கைப்பற்றிய முதல் இந்தியர் சச்சின்!

சச்சின்

சச்சின்

22 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணத்தின் நினைவலைகளை பகிர்ந்துகொண்டார் சச்சின்...

  • News18
  • Last Updated :
  • Share this:
விளையாட்டு துறையில் ஆஸ்கர் என அழைக்கப்படும் லாரியஸ் விருதினை இந்தியாவில் முதல் முறையாக சச்சின் பெற்றுள்ளார்.


விளையாட்டு துறையில் ஆஸ்கர் என அழைக்கப்படும் லாரியஸ் விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனை, அணி, கம்பேக் என ஒவ்வொரு பிரிவிலும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.


இவ்விழாவில் சிறந்த தருணத்திற்கான விருது மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. இந்தியர் ஒருவர் லாரியஸ் விருது வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இதையும் சச்சின் தான் தொடங்கி வைத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும்.


இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வாக்குகள் அதிகமாக சச்சினுக்கு கிடைத்த நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் Steve Waugh இடம் இருந்து இந்த விருதை சச்சின் பெற்றுக்கொண்டார்.


2011 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற தருணம் எவராலும் மறக்க முடியாதது. இந்திய அணி கோப்பையை வென்றதும், வீரர்கள் சச்சினை தோளில் சுமந்து கொண்டு மைதானத்தை வலம் வந்து கொண்டாடிய தருணம், கிரிக்கெட் அரங்கின் ஆல் டைம் ஃபேவெரட் தருணமாக பார்க்கப்படுகிறது.


உலகக்கோப்பை வென்ற தருணம் குறித்து பேசிய சச்சின், உலகக்கோப்பையை 2011-ம் ஆண்டு வென்றது நம்ப முடியாத தருணம், கோப்பை வென்றதை வார்த்தைகளால் இன்றும் விவரிக்க முடியவில்லை. 1983-ல் இந்தியா உலகக்கோப்பையை முதல் முறையாக வென்ற போது, தனக்கு 10 வயது என கூறிய சச்சின், கோப்பை வென்றதை இந்திய ரசிகர்கள் கொண்டாடியதை, தன்னால் உணரமுடியவில்லை, ஆனாலும் அனைவருடனும் சேர்ந்து தானும் கொண்டாடியதாக தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.


சிறந்த தருணமாக இருந்த அதனை, தன்னாலும் ஒருநாள் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என எண்ணியதாக கூறினார்.


1983-க்கு பிறகு 22 ஆண்டுகள் கழித்து 2011-ல் இந்தியா கோப்பையை வென்றது என் வாழ்க்கையின் மிக பெருமையான தருணம் என உணர்வுப்பூர்வமாக பேசிய சச்சின், உலகக்கோப்பை வென்றது குறித்து பல்வேறு உணர்ச்சிப்பூர்வமான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தார்.


இறுதியாக, இந்த கோப்பை தனக்கானது மட்டுமல்ல, நம் அனைவருக்கும் சொந்தமானது என கூறிய சச்சின், இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கனவுகளைத் துரத்த வீறுநடை போடவேண்டும் எனவும் இளம் வீரர்களுக்கு அறிவுரை கூறினார்.


Also see...



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: