Home » News » Sports » SACHIN TENDULKAR PRAISES TAMIL NADU PLAYER NATARAJAN SKV

அற்புதமான பந்துவீச்சு... தமிழக வீரர் நடராஜனை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தமிழக வீரர் நட்ராஜன் அற்புதமாக பந்துவீசியதாக சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

அற்புதமான பந்துவீச்சு... தமிழக வீரர் நடராஜனை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்
தமிழக வீரர் நட்ராஜன் , சச்சின் டெண்டுல்கர்
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய நடராஜன் துல்லியமான யார்க்கர் மற்றும் தரமான பந்துவீச்சு காரணமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய நடராஜன் 16 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதன்பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நடராஜனுக்கு முதல் முறையாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அறிமுக போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனைத்தொடர்ந்து டி20 போட்டிக்கான இந்திய அணியில் களம் கண்ட நடராஜன், தனது அசாத்திய திறமையாலும், துல்லியமான யார்க்கர் பந்துவீச்சாலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

ALSO READ |  google down | வாழ்க்கையே டவுன்லதான் இருக்கு, போவியா..! முடங்கிய கூகுள்... அசால்ட்டாக மீம்ஸ் போடும் நெட்டிசன்கள்


முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை சாய்த்த நடராஜன், இரண்டாவது டி20 போட்டியிலும் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களை வெளியேற்றி மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினார். இறுதியாக இந்திய அணி டி20 தொடரை வென்று வரலாற்றுச்சாதனை நிகழ்த்தியது. தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா இவ்விருது நடராஜனுக்குத்தான் பொருத்தமானது என கூறி, கோப்பையை நடராஜனுக்கு வழங்கி கௌரவித்தார். மேலும் சாம்பியன் கோப்பையை வாங்கிய கேப்டன் கோலி, நடராஜன் கையில் கொடுத்து அழகுபார்த்தார்.

இந்தநிலையில், நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தமிழக வீரர் நடராஜன் அற்புதமாக பந்துவீசியதாக புகழ்ந்துள்ள சச்சின், எதிர்வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்றார் . நடந்து முடிந்த ஆஸ்திரேலியா ஏ அணியுடனான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர்கள் அசத்தலாக பந்துவீசியுள்ளதாகவும் பாராட்டினார். கொரோனாவுக்கு பிறகு நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பந்துகளில் எச்சில் பயன்படுத்தக்கூடாது என்ற விதி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைகிறது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விமர்சித்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள் 

 
First published: December 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories