லண்டனில் 119 ஆண்டு பழமையான வின்டேஜ் காரை ஓட்டிய சச்சின் டெண்டுல்கர் - வீடியோ

Sachin Tendulkar | London |

Vijay R | news18
Updated: June 28, 2019, 4:57 PM IST
லண்டனில் 119 ஆண்டு பழமையான வின்டேஜ் காரை ஓட்டிய சச்சின் டெண்டுல்கர் - வீடியோ
வின்டேஜ் கார் ஓட்டும் சச்சின் டெண்டுல்கர்
Vijay R | news18
Updated: June 28, 2019, 4:57 PM IST
லண்டன் நகரில் 119 ஆண்டுக்கால் பழமையான வின்டேஜ் காரை சச்சின் டெண்டுல்கர் ஓட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அரையிறுதிப் சுற்றுக்கு எந்த அணி முன்னேறும் என்று கணிக்க முடியாத அளவிற்கு லீக் போட்டிகளின் முடிவுகள் உள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளின் வர்ணனையாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார். லண்டனில் உள்ள பிரபல ராயல் ஆட்டோ மொபைல் கிளப்பிற்கு சச்சின் அவர் சென்றுள்ளார்.


அப்போது அங்கிருந்த பழமையான காரை சச்சின் ஓட்டி மகிழ்ந்துள்ளார். மிகவும் பழமையான அந்த கார் 4 கியர்களை கொண்டுள்ளது. அந்த காரின் அதிகபட்ச வேகம் 25 கி.மீ. தான். காரை எப்படி இயக்க வேண்டுமென அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த நபர் சச்சினுக்கு பயிற்சி அளித்தார்.

லண்டன் சாலைகளில் பழமையான வின்டேஜ் காரை இயக்கியதை பின் சீட்டில் அமர்ந்திருந்த அவரது மனைவி அஞ்சலி செல்போனில் வீடியோ எடுத்தார். சச்சின் வின்டேஜ் கார் ஓட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.


Loading...
அந்த பதிவில் மிகவும் பழமையான காரை ஓட்டியது மனதிற்கு சந்தோஷத்தை தருகிறது. இதற்கு காரணமாக இருந்த ராயல் ஆட்டோ மொபைல் கிளப்பிற்கும், தனக்கு உதவியாக இருந்த தோழருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

Also Read : அடுத்தமுறை இவர்கள் இருக்கமாட்டார்கள்... இதுவே கடைசி உலகக் கோப்பை...!

Also Read : சச்சினின் இமாலய சாதனையை முறியடிக்கக் காத்திருக்கும் வார்னர்...!

Also Watch

First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...