கொரோனா வைரஸ் தொற்று மிகவேகமாக பரவி வரும் சூழலில், மருத்துவர்கள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை அனைவரையும் கவுரவிக்கும் விதமாக தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை என்று சச்சின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இவ்வளவு விரைவாக உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கில் உயிர்பலி வாங்கும் என்பது எவரும் நினைத்திராத ஒன்று. உலகம் முழுவதும், கொரோனா வைரஸால் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகிய நிலையில், உயிரிழப்பு 600ஐ தாண்டியுள்ளது. மக்களின் உயிரைக் காப்பாற்ற முயலும் மருத்துவர்களும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்த சூழலில் பொருளாதார ரீதியாக ஏழை மக்களுக்கு உதவ அரசியல், விளையாட்டு, சினிமா என பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த பொருள் மற்றும் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர்.
இந்த நிலையில், கிரிக்கெட் அரங்கின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர், சதத்தில் சதம் கண்ட நாயகன் என பல பட்டங்களால் புகழாரம் சூட்டப்படும் கிரிக்கெட் நாயகன் சச்சின் டெண்டுல்கர் ஒரு முடிவை எடுத்துள்ளார்.
ஏப்ரல் 24, 1973 சச்சின் பிறந்த நாள். தனது 47வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின், அதனை தான் கொண்டாடப்போவதில்லை என்ற முடிவெடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வரும் சூழலில், அதிலிருந்து உயிர்களை பாதுகாக்க மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என ஒட்டுமொத்த மருத்துவ துறையும் கொரோனாவுடன் வாழ்வா சாவா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், கவுரவிக்கும் வகையிலும், இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என சச்சின் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also see...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.