அம்மாவின் பிறந்த நாள் பரிசுக்கு விலைமதிப்பே இல்லை...! மகிழ்ச்சியில் சச்சின்

தாயிடம் ஆசி வாங்கிய புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் உணர்வுப்பூர்வமாக சச்சின் பகிர்ந்துள்ளார்.

அம்மாவின் பிறந்த நாள் பரிசுக்கு விலைமதிப்பே இல்லை...! மகிழ்ச்சியில் சச்சின்
சச்சின் மற்றும் அவரது தாய்
  • Share this:
அம்மாவின் பிறந்த நாள் பரிசிற்கு விலைமதிப்பே இல்லை என்று சச்சின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் கடவுள் என வர்ணிக்கப்படும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு தனது தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அவரது தாயார் பிறந்தநாள் பரிசாக கணபதி படத்தை வழங்கினார். இந்நிகழ்வை தனது டிவிட்டர் பக்கத்தில் சச்சின் பகிர்ந்துள்ளார்.

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இன்றைய நாள் கொண்டாட்ட நாள் தான். காரணம், சச்சின் எனும் மிகப்பெரும் ஜாம்பவானின் பிறந்த தினம். ஆனால், இந்த முறை அந்த ஜாம்பவானின் பிறந்தநாள் எந்தவித கொண்டாட்டமும் இல்லாமலே முடிந்துள்ளது.


நாடு முழுவதும் கொரோனோ தொற்றால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மருத்துவ பணியாளர்கள், துப்புறவு பணியாளர்கள், காவலர்கள் என கொரோனோவிலிருந்து மக்களை பாதுகாப்பவர்களை கௌரவிக்கும் விதமாக இன்று தனது பிறந்தநாளை கொண்டாடமாட்டேன் என சச்சின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.ஊரடங்கில் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்தும், அவ்வப்போதும் சமூக கடமைகளையும் ஆற்றி வருகிறார் சச்சின். இந்நிலையில், ஊரடங்கால் இல்லத்தில் இருப்பதால் பிறந்தநாளான இன்று தனது தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றார் சச்சின். வழக்கமாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 24 ம் தேதி தனத் பிறந்தநாளில் பயிற்சியாளரை சந்தித்து ஆசி பெறுவதோடு, ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்திலும் கொண்டாடி மகிழ்வார்.

அத்துடன் மும்பையில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இந்நிலையில் கொரோனோ வாரியர்ஸ்களை கௌரவிக்க இந்த ஆண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை சச்சின் தவிர்த்துவிட்டார்.

தாயிடம் ஆசி வாங்கிய புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் உணர்வுப்பூர்வமாக சச்சின் பகிர்ந்துள்ளார். மிகப்பெரும் கொண்டாட்டங்கள் இல்லாத போதிலும், மாஸ்டர் பிளாஸ்டருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.


Also see...
First published: April 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading