• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மகளிர் தின ஸ்பெஷல் 2019: அம்மாவுக்கும் மனைவிக்கும் சர்ப்ரைஸ் கொடுத்த சச்சின்!

மகளிர் தின ஸ்பெஷல் 2019: அம்மாவுக்கும் மனைவிக்கும் சர்ப்ரைஸ் கொடுத்த சச்சின்!

சச்சின்

சச்சின்

”தனது மகன் எந்தவொரு முயற்சியில் தோல்வியுற்றாலும் அவனது அம்மா அவனிடம் அதை தெரிவிக்க மாட்டாள். இது தான் தாய் பாசம்” என்றார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி மற்றும் அம்மாவிற்கு சமையல் செய்து கொடுத்துள்ளார்.

    மகளிர் தின கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு பிடித்த பெண்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்து கொடுத்தும், பிடித்தமான பொருட்களை பரிசாக வாங்கிக் கொடுத்தும் அசத்தினர்.

    கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், இதற்கெல்லாம் ஒரு படி மேல் சென்று, தனது அம்மா மற்றும் மனைவி அஞ்சலிக்கு பிடித்தமான உணவை செய்து கொடுத்து அசத்தியுள்ளார்.

    மாஸ்டர் பிளாஸ்டரான சச்சின், சிறுபிள்ளையாக இருக்கும் போது, அவரது அம்மா ரஜ்னி டெண்டுல்கர், கத்திரிக்காய் கொண்டு சமைக்கும் சுவையான உணவை எந்தவித பெண்களின் உதவியும் இன்றி, மகளிர் தின ஸ்பெஷலாக சமைத்து தனது சமையல் திறமையை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார்.

     

    சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா, தற்போது வெளியூர் சென்றிருப்பதால், இந்த ஸ்பெஷல் உணவை தனது அம்மா மற்றும் மனைவி அஞ்சலிக்கு விருந்தளிக்கப்போவதாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

    மேலும், உணவை சமைத்து முடித்த சச்சின், தனது அம்மாவிடம் ருசி பார்க்க கொடுத்தார். ”தாங்கள் செய்வதை போல நான் சமைத்துள்ளேனா?” என மராத்தியில் சச்சின் தனது அம்மாவிடம் வினாவினார்.

    சச்சினின் சமையலை ருசி பார்த்த அவரது அம்மா ரஜ்னி டெண்டுல்கர், சுவையாக இருப்பதாக தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த சச்சின், ”தனது மகன் எந்தவொரு முயற்சியில் தோல்வியுற்றாலும் அவனது அம்மா அவனிடம் அதை தெரிவிக்க மாட்டாள். இது தான் தாய் பாசம்” என்றார்.

    சச்சினின், இந்த சாகச சமையலை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களையும், அவரது அம்மா, மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாராவுக்கும் மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: