• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ''டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடும் தகுதி ருதுராஜுக்கு உள்ளது''

''டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடும் தகுதி ருதுராஜுக்கு உள்ளது''

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கலக்கியிருப்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டி20 இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.

  • Share this:
    டெஸ்ட், ஒருநாள் மறறும் டி20 என அனைத்து ஃபார்மேட்டுகளிலும் விளையாடும் தகுதி ருதுராஜுக்கு உண்டு என்று சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கவனம் செலுத்தி வருகிறது. வரும் 17-ம்தேதி இந்த கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.

    முதலில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும், அடுத்ததாக 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாடும்.  டி20 போட்டிகள் ஜெய்ப்பூர், ராஞ்சி, கொல்கத்தா நகரங்களிலும், டெஸ்ட் போட்டிகள் கான்பூர், மும்பையிலும் நடைபெறுகிறது. இதற்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் திவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மூத்த வீரர்கள் முகமது ஷமி, முன்னாள் டி20 கேப்டன் விராட் கோலி, பும்ரா, ரவிந்திரா ஜடேஜா ஆகியோருக்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இவர்களுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டடத்தை வெளிப்பபடுத்திய ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ருதுராஜ், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன் (635)எடுத்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை பெற்றிருக்கிறார்.

    இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கூறியதாவது-

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அனைவராலும் கவனிக்கப்பட்ட வீரராக ருதுராஜ் இருந்தார். மிக எளிதாக அவர் பந்துகளை எதிர்கொண்ட விதம் ஆச்சர்யம் அளித்தது. தனது முழு திறமையையும் அவர் வெளிப்படுத்தி, சென்னை அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் அவருக்கு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான அனைத்து தகுதியும் உள்ளது.

    ஐபிஎல் போட்டிகளில் நெருக்கடி மிகுந்த நேரங்களில் ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டார். இது ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் அவசியம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் எப்படி விளையாடப் போகிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்திற்காக விளையாடி வரும் ருதுராஜ், சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரில் களம் இறங்கினார். இதில் அவர் போதுமான ரன்களை எடுக்கவில்லை. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கலக்கியிருப்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நியூசிலாந்து செல்லும் டி20 இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: