ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷ்ய தடகள அணிக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து, சர்வதேச ஊக்க மருத்து தடுப்பு முகமை உத்தரவிட்டுள்ளது.
இந்த தடை காரணமாக அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டி, குளிர்கால ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், சர்வதேச தடகள சாம்பியன்ஷிப், 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி உள்ளிட்ட தொடர்களில் அந்த நாடு விளையாட முடியாது.
ரஷ்யாவின் கொடி, தேசிய கீதம், பெயர் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது. எனினும், வீரர்கள் தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்று விளையாட முடியும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.