• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 14 ஆண்டுகால சேவாக் - காம்பீர் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - கே.எல். ராகுல்!!

14 ஆண்டுகால சேவாக் - காம்பீர் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - கே.எல். ராகுல்!!

ரோஹித், கே.எல்.ராகுல்

ரோஹித், கே.எல்.ராகுல்

2007 -ல் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சேவாக் - காம்பீர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்திருந்தது.

  • Last Updated :
  • Share this:
    டி20 உலக கோப்பை தொடரின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா - கே. எல். ராகுல் இணை புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக நீடித்த சேவாக் - காம்பீர் சாதனையை ரோகித் - ராகுல் இணை முறியடித்துள்ளது.

    உலக கோப்பை தொடரில் தடுமாறி வந்த இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிதானமான ஆட்டத்தை தொடங்கியது. பொறுப்புடன் விளையாடிய தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 48 பந்துகளில் 69 ரன்களையும், ரோகித் சர்மா 47 பந்துகளில் 74 ரன்களையும் எடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்தது. இந்திய அணி 20 ஓவர் போட்டி வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகமான ரன் இதுவாகும்.

    முன்பு 2007 -ல் நடந்த டி20 உலக கோப்பை தொடரின் போது இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சேவாக் - காம்பீர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்திருந்தது. 14 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான அந்த ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also read:  பெட்ரோல், டீசல் விலையில் கூடுதலாக 7 ரூபாய் குறைத்த கர்நாடகா, புதுவை அரசுகள்!

    20 ஓவர் போட்டி தொடர்களில் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 23 இன்னிங்ஸ்களில் 4-வது முறையாக இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்து இருக்கிறது. பாகிஸ்தானின் ஓபனர்களான பாபர் ஆசம் - முகம்மது ரிஸ்வான் ஜோடி 19 இன்னிங்ஸ்களில் 5 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்திருக்கிறது.

    ஆப்கனுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 210 ரன்களை குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த ஆப்கன் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் குரூப் - 2 பிரிவு தரவரிசை பட்டியலில் இந்திய அணி நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை நாளை எதிர்கொள்ள உள்ளது. தரவரிசை பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: