Home /News /sports /

100-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார் ரோஜர் ஃபெடரர்!

100-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார் ரோஜர் ஃபெடரர்!

ரோஜர் ஃபெடரர்

ரோஜர் ஃபெடரர்

29 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் ரோஜர் ஃபெடரர் விளையாடியுள்ளது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையாகும்.

  • News18
  • Last Updated :
    துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றில் வென்றதன் மூலம், சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 100-வது சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.

    டென்னிஸ் தர வரிசையில் இரண்டாம் இடம் வகிக்கும் ரோஜர் பெடரர், துபாய் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் குரோஷியாவின் போர்னா கோரிச்சை எதிர்கொண்டார். இதில் ஃபெடரர் 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.

    இன்று இரவு நடந்த இறுதிப் போட்டியில், கிரீஸ் வீரர் ஸ்டெஃபனாஸ் சிட்சிபாஸ் உடன் ஃபெடரர் பலப்பரீட்சை நடத்தினார். இதில் 6-4, 6-4 என்ற கணக்கில் சிட்சிபாஸை ரோஜர் ஃபெடரர் வென்றார். இதன்மூலம், டென்னிஸ் அரங்கில் ரோஜர் ஃபெடரர் தனது 100-வது ஏ.டி.பி. சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.

    இதையடுத்து, இந்த மைல் கல்லை எட்டும் இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஃபெடரர் அடைந்துள்ளார். தற்போது, அமெரிக்க முன்னாள் வீரர் ஜிம்மி கானர்ஸ் 109 பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    ரோஜர் ஃபெடரர் இதுவரை ஒற்றையர் ஆண்கள் பிரிவில் 20 கிராண்ட்ஸ்லாம் (6 ஆஸ்திரேலிய ஓபன், ஒரு பிரெஞ்சு ஓபன், 5 அமெரிக்க ஓபன், 8 விம்பிள்டன்) பட்டங்களை வென்றுள்ளார். மேலும், 29 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் ரோஜர் ஃபெடரர் விளையாடியுள்ளது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையாகும்.

    Also watch

    Published by:DS Gopinath
    First published:

    Tags: Roger Federer

    அடுத்த செய்தி