• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து ரோஜர் பெடரர் விலகல்..!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து ரோஜர் பெடரர் விலகல்..!

ரோஜர் ஃபெடரெர் (கோப்பு படம்)

ரோஜர் ஃபெடரெர் (கோப்பு படம்)

  • Share this:
    ரோஜர் பெடரர் தனது வலது முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, வரவிருக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 38 வயதான பிரபல டென்னிஸ் வீரர் பெடரர். இவர் இதுவரை 20 கிரண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 3-ம் இடம் வகிக்கிறார்.

    டென்னிஸ் உலகின் முன்னணி வீரராக அறியப்படும் பெடரர், சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரை இறுதியில் ஜோகோவிச்சிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

    அந்த தொடரின் போதே அவர் கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், வரும் மே மாதம் தொடங்க இருக்கும் ’பிரெஞ்ச் ஓபன் தொடரில் தன்னால் கலந்துகொள்ள இயலாது’, என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பெடரர்.

    இதற்கு முன்பு ஒருமுறை பிரெஞ்ச் ஓபனை வென்றுள்ள பெடரர் கடந்த ஆண்டு அரையிறுதி வரை முன்னேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெடரர் விலகியுள்ள நிலையில் ஸ்பெயினின் ரபேல் நடால் இந்த தொடரை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அவர் பிரெஞ்ச் ஓபனையும் வெல்லும் பட்சத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெடரரின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: