• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பிரெஞ்ச் ஓபன்: 400-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வென்று அசத்திய ரோஜர் பெடரர்!

பிரெஞ்ச் ஓபன்: 400-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வென்று அசத்திய ரோஜர் பெடரர்!

ரோஜர் பெடரர்

ரோஜர் பெடரர்

இந்த வெற்றியின் மூலம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸின் அதிக வயதில் 4வது சுற்றுக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமையை பெடரர் பெற்றுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஓற்றையர் பிரிவில் 37 வயதான ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசிஸ் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஓற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்றில் முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தரவரிசையில் 63-வது இடத்தில் இருக்கும் நார்வேவின் காஸ்பர் ரூடு உடன் பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே பெடரர் ஆதிக்கம் செலுத்தி வந்தார். முதல் செட்டை 6-3 என்று எளிதாக வீழ்த்தினார். தொடர்ந்து 6-1, 7-6(10\8) என்ற நேர்செட்கணக்கில் காஸ்பரை வீழ்த்தி பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸின் அதிக வயதில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமையை பெடரர் பெற்றுள்ளார். பெடரருக்கு தற்போது 37 வயதாகிறது. மேலும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பெடருக்கு இது 400-வது போட்டியாகும். இதன் முலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 400 போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் பெடரர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் ஸ்பெயினின் கார்பை முகுருசா உக்ரைனின் எலினா சிவிடோலினாவை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி நான்காவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

Also Watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: