• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி!

ரோஜர் பெடரர்

ரோஜர் பெடரர்

  • Share this:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் காலிறுதி சுற்றில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி போட்டியில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், 78-வது இடத்தில் இருக்கும் பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவும் பலப்பரிட்சை நடத்தினார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இருவரும் மாற்றி மாற்றி செட்டை கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்க கூடிய கடைசி செட்டில் டிமிட்ரோ ஆக்ரேஷமாக விளையாடி வெற்றி பெற்றார். டிமிட்ரோ 6-3, 4-6, 6-3, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.



டிமிட்ரோ முதன்முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். ரோஜர் பெடரர் இதுவரை அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை வென்றுள்ளார்.

Also Watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: