IPL-ல் சிஎஸ்கே-வுடன் அன்றும் , இன்றும் - குறுகிய காலத்தில் உச்சத்திற்கு வந்த ரிஷப் பண்ட்!

ரிஷப் பண்ட்

ஸ்ரேயாஸ் ஐயரின் தோள்பட்டை காயத்தைத் தொடர்ந்து, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரிஷப் பண்ட்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடந்த சில மாதங்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் இளம் வீரர் ரிஷப் பண்ட். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் வெளிப்படுத்திய மேம்பட்ட பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறன்களுடன் கூடிய ரிஷப்பின் தற்போதய ஃபார்ம் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களின் பேசுபொருளாக மாறி உள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயரின் தோள்பட்டை காயத்தைத் தொடர்ந்து, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் இந்த இளம் வீரர். தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று தனது குரு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொண்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட குரு - சிஷ்யன் தலைமையிலான அணிகள் மோதிய இந்த போட்டியில் சென்னை அணி நிணயித்த 189 ரன்கள் என்ற வெற்றி இலக்கை 18.4 ஓவர்களிலேயே எட்டி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இதில்டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் மற்றும் பிருத்வி ஷா இருவரும் அதிரடியாக விளையாடி அணி வெற்றி பாதைக்கு செல்ல வழிவகுத்தனர்.

சில மூர்க்கத்தனமான ஷாட்களால் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த பிருத்வி ஷா வெறும் 38 பந்துகளில் 72 ரன்களும், தவான் வெறும் 54 பந்துகளில் 85 ரன்களையும் குவித்தனர். இறுதியில் டெல்லி அணி 3 விக்கட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. இதனை அடுத்து ரிஷப்பின் கேப்டன்சியை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். அப்படியே 3 ஆண்டுகளுக்கு முன் செல்வோம்.



கடந்த 2018-ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை சென்னை அணி கைப்பற்றிய போது கோப்பையுடன் அணி வீரர்கள் உற்சாகமாக போஸ் கொடுத்து செல்பி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே இருந்த ரிஷப் சென்னை அணி வீரர்களுடன் ஒரு மூலையில் நின்று ஒட்டி கொண்டு அந்த செல்பியில் போஸ் கொடுத்தார். தற்போது குருவின் அணியை வீழ்த்திய பிறகு சென்னை வீரர்கள் சூழ வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சிரித்தபடியே வந்தார். இந்த இரு போட்டாக்களையும் இணைத்து ஐபிஎல்-லில் சிஎஸ்கே-வுடன் "அன்றும் , இன்றும்" என்று கேப்ஷனிட்டு காலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது. சிலரை எவ்வளவு உச்சத்தில் கொண்டு போய் சேர்த்து விடுகிறது என்று ஒப்பிட்டு நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர்.





மேலும் இந்த போட்டியின் போது அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம் சென்னை அணி கேப்டன் தோனி அவுட்டான போது அணியின் மற்ற வீரர்கள் அதற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போது, குரு ஆட்டமிழந்ததை கொண்டாட மனமில்லாமல் ரிஷப் பண்ட் அமைதி காத்தார்.

Also read... ஐபிஎல் கிரிக்கெட்டா.. இல்ல ஸ்ட்ரீட் கிரிக்கெட்டா குழம்பிய ரசிகர்கள் - ரியான் பராக்கை எச்சரித்த அம்பயர்

இது தொடர்பான வீடியோவும் வைரலானது. இதற்கிடையே மூத்த வீரர் தவான் கேப்டன் ரிஷப் பண்ட்டை பாராட்டியுள்ளார். போட்டியின் போது பதற்றமின்றி அமைதியாக இருந்து, இளம் வீரர்களை உற்சாகப்படுத்தினார். ரிஷப்பின் சிறப்பம்சமே அவர் அமைதியாக இருப்பது தான். கேப்டனாக முதல் போட்டியில் பங்கேற்ற ரிஷப் நல்ல மாற்றங்களையும் செய்தார். முதல் போட்டியிலேயே தன்னை கேப்டனாக்கியது சரியான முடிவே என்பதை அனுபவத்துடன், உறுதியாக இருந்து நிரூபித்து விட்டார் என்று குறிப்பிட்டார் தவான்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: