`இவர்தான் அடுத்த தோனி’- சேவாக் கைகாட்டிய வீரர் யார்?

news18
Updated: September 14, 2018, 8:49 PM IST
`இவர்தான் அடுத்த தோனி’- சேவாக் கைகாட்டிய வீரர் யார்?
எம்.எஸ்.தோனி.
news18
Updated: September 14, 2018, 8:49 PM IST
தோனி ஓய்வுபெற்ற பிறகு அவர் இடத்தை ரிஷப் பண்ட் நிரப்புவார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கிப்பர் மகேந்திர சிங் தோனி. அதிரடி பேட்ஸ்மானாக அறிமுகமாகி பின்பு கேப்டனாக இருந்து இந்தியாவுக்கு 2-ம் உலகக்கோப்பையை வென்றுகொடுத்தவர். இவருக்கு இந்தியாவெங்கும் தீவிரமான ரசிகர்கள் உள்ளனர்.

2014-ம் ஆண்டு யாரும் எதிர்பாரா வகையில் தோனி தீடிரென்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். இப்போது தோனி ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஒரு சாராரும், அவர் ஓய்வு பெற தேவையில்லை என்று மற்றொரு சாராரும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.


விரேந்தர் சேவாக்

இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய இளம் வீரர் ரிஷப் பண்ட் கடைசி போட்டியில் அதிரடியாக ஆடி சதம் விளாசினார். டெஸ்ட் போட்டியில் தன் திறமையை நிரூபித்த பண்டுக்கு ஒரு நாள் போட்டிகளிலும் வாய்ப்பு தரவேண்டும் என்று குரல்கள் எழுந்துவருகின்றன.

Loading...
ஐபிஎல் தொடரின்போது தோனியிடம் பாடம் கற்கும் பண்ட்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக், ``ரிஷப் பண்டுக்கு ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பு வழங்கினாலும், வரும் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன்பு 15-16 போட்டிகள் மட்டுமே விளையாட முடியும். ஆனால், தோனி 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதனால் அவரது அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது அவரே உலகக்கோப்பை போட்டிகள் வரை விக்கெட் கீப்பிங் செய்வதற்கு பொருத்தமானவர்” என்று தெரிவித்துள்ளார்.

"பண்ட் நினைத்த நேரத்தில் சிக்ஸர் அடிக்கக்கூடிய திறமை உள்ளவர். ஆனால் தோனி தனி ஆளாக போட்டிகளை வென்றுள்ளார். தோனியின் சரியான வாரிசாக பண்ட் இருப்பார். தோனி ஒய்வு பெறும்போது அவரது பொறுப்புகளை பண்டிடம் ஒப்படைத்துச் செல்லலாம்” எனவும் சேவாக் தெரிவித்துள்ளார்.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...