உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக டெல்லியிலிருந்து சென்ற ரிஷப் பண்ட் கார் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சாலையில் நடுப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் டிவைடரில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, கார் கண்ணாடியை உடைத்து வெளியேற ரிஷப் பண்ட் முயற்சித்துள்ளார்.
அப்போது அவருக்கு கை, கால், முதுகு, தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை டெஹ்ராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்றைய முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனை ரிஷப் பண்டின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து அறிக்கை வெளியிட்டது. அதன் படி "அவரை எங்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது, அவர் முழு சுயநினைவுடன் இருந்தார், எங்களின் மருத்துவமனையில் எக்ஸ்ரே பரிசோதனை அறிக்கைகள் அவரது எலும்பில் காயங்கள் இல்லை என்று கூறுகிறது.
ரிஷப் பந்தின் மூளை மற்றும் முதுக்குத்தண்டு வடத்தின் எம்ஆர்ஐ முடிவுகள் அவரது மூளை மற்றும் முதுகுத்தண்டில் எந்த காயமும் இல்லை. எல்லாம் சரியான நிலையில் இருப்பதைக் காட்டியது. அதனால் தலையில் எந்த பாதிப்பும் இல்லை.முகத்தில் ஏற்பட்ட காயங்கள், சிதைந்த காயங்கள் மற்றும் சிராய்ப்புகளுக்கு தையல் எதுவும் போடாமல் உடனடியாக தேர்ந்த மருத்துவர்களால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அவரது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது உள்ளது. மேலும் வெள்ளிக்கிழமையன்று வலி மற்றும் வீக்கம் இருந்தது. எனவே, சனிக்கிழமையன்று ரிஷப் பந்த்துக்கு கணுக்கால் மற்றும் முழங்காலில் MRI பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் அதற்கான சிகிச்சை வழங்கப்படும் " என்று அவருக்கு அவசர சிகிச்சை அளித்த டாக்டர் சுஷில் நாகர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது முதுகில் ஏற்பட்ட காயங்கள் இணையத்தில் வைரல் ஆனா நிலையில் அது தீவிரத்தன்மை அற்றது. தீக்காயங்கள் இல்லை. கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேற முயற்சித்தபோது ஏற்பட்ட காயங்களாக இருக்கலாம். அது விரைவில் குணமடைந்துவிடும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் முழுமையான உடற்தகுதியை மீட்டெடுக்க 2 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று மருத்துவமனை தரப்பு தெரிவித்தது. பண்ட் சிகிச்சைக்கான முழு செலவையும் தனது அரசே ஏற்கும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். இருப்பினும், பந்த் ஒரு முக்கிய ஒப்பந்த வீரர் என்பதால் அவரது அனைத்து மருத்துவ செலவுகளையும் பிசிசிஐ முழுமையாக கவனித்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car accident, Rishabh pant