Home /News /sports /

தடகள விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய தடகள கூட்டமைப்புடன் கூட்டு சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம்!

தடகள விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய தடகள கூட்டமைப்புடன் கூட்டு சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம்!

இந்திய தடகள கூட்டமைப்புடன் கூட்டு சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம்!

இந்திய தடகள கூட்டமைப்புடன் கூட்டு சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம்!

இந்திய தடகள விளையாட்டுகள் கூட்டமைப்புடன் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கூட்டணியை விரிவுப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார்.

    தடகள விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில், இந்திய தடகள கூட்டமைப்புடன் ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது.

    இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) மற்றும் இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) இந்தியாவில் தடகளத்தில் முழுமையான வளர்ச்சியை அடைய நீண்ட கால கூட்டாணியை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் அறக்கட்டளை பல ஆண்டுகளாக இந்திய தடகள கூட்டமைப்புக்கு அர்ப்பணிப்புள்ள பங்குதாரராக இருந்து வருகிறது. தற்போது, இந்த இரு அமைப்புகளுக்கு இடையேயான உடன்பாட்டை மேலும் அதிகப்படுத்தும் வகையில் இந்த புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    ஒடிசா ரிலையன்ஸ் அறக்கட்டளை தடகள உயர் செயல்திறன் மையம் மற்றும் சர் ஹெச்என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை உள்ளிட்ட ரிலையன்ஸ் அறக்கட்டளைகள் மூலம், நாடு முழுவதும் உள்ள இந்திய விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவது மற்றும் அவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகள், பயிற்சி மற்றும் விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதை இந்த கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்த கூட்டணியானது பெண் விளையாட்டு வீராங்கனைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, பாலின வேறுபாட்டைக் குறைத்து அவர்களின் கனவுகளை அடைய அவர்களுக்கு உதவும்.

    இந்திய தடகள விளையாட்டுக்கள் கூட்டமைப்பின் முதன்மை பங்குதார் என்ற முறையில் ரிலையன்ஸ் பிராண்டின் அடையாளம் முக்கிய தேசிய, சர்வதேச போட்டிகள் மற்றும் பயிற்சி போட்டிகளில் அணியின் ஜெர்சிகள் மற்றும் பயிற்சி கருவிகள் முழுவதும் இடம்பெற்றிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மேலும், இதுதொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் நீட்டா அம்பானி கூறியதாவது, இந்திய தடகள விளையாட்டுகள் கூட்டமைப்புடன் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கூட்டணியை விரிவுப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தடகளம் என்பது உலகளாவிய விளையாட்டு துறைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாகும், இந்த கூட்டணி பெண்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, நமது நாட்டின் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்புகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதன் மூலம் இந்திய தடகளத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    சரியான உள்கட்டமைப்பு, பயிற்சி மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம், உலகெங்கிலும் நம் இளம் விளையாட்டு வீரர்கள் பலர் வெற்றி பெறுவதைக் காண்போம் என்று நான் நம்புகிறேன். இந்த கூட்டணி இந்தியாவில் ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்தும் என்ற எங்கள் கனவை நோக்கி ஒரு முக்கியமான படியாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Nita Ambani, Reliance

    அடுத்த செய்தி