• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • உசைன் போல்டைவிட வேகமாக ஓடியவருக்கு ஒலிம்பிக்கில் வாய்ப்பு? மத்திய அமைச்சர் நம்பிக்கை

உசைன் போல்டைவிட வேகமாக ஓடியவருக்கு ஒலிம்பிக்கில் வாய்ப்பு? மத்திய அமைச்சர் நம்பிக்கை

சீனிவாச கவுடா

சீனிவாச கவுடா

  • Share this:
    கர்நாடகாவில் நடைபெற்ற கம்பாலா பந்தயத்தில் மின்னல் வேகத்தில் ஓடிய சீனிவாச கவுடாவிற்கு இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

    கர்நாடாவில் பிரபலமான கம்பாலா எனும் எருது ஓட்டும் போட்டியில் உசைன் போல்ட்டை விட வேகமாக ஓடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் சீனிவாச கவுடா. மங்களூரு அருகே அய்கலாவில் நடந்த கம்பாலா பந்தயத்தில் 142.50 மீட்டர் துரத்தை வெறும் 13.62 விநாடிகளில் கடந்து அதிசயிக்க வைத்துள்ளார் சீனிவாச கவுடா.

    இந்த ஓட்டத்தை 100 மீட்டருக்கானதாகக் கணக்கிட்டு பார்த்தால், அதனை 9.55 விநாடிகளில் அவர் ஓடியிருக்கிறார். இது உசைன் போல்ட்டின் உலக சாதனையை விட 0.03 விநாடிகள் குறைவான நேரம் என்பதே சீனிவாச கவுடாவை பலரும் ஆச்சர்யமாகப் பார்க்கக் காரணம்.

    உசைன் போல்ட் நன்றாக உள்ள தரையில் ஓடினார் என்றால் சீனிவாச கவுடாவோ ஓடுவதற்கு சிரமமான தண்ணீர் நிரப்பப்பட்ட மைதானத்தில் இப்படி மின்னல் வேகத்தில் பறந்திருக்கிறார். கட்டுமானப் பணியாளராக இருக்கும் 28 வயதான சீனிவாச கவுடா கடந்த 5 ஆண்டுகளாக கம்பாலா பந்தயத்தில் மாடுகளை விரட்டிக் கொண்டு ஓடி பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

    இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து இவர் போன்ற இளைஞர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் முறையாக பயிற்சி கொடுத்தால் ஒலிம்பிக்கில் நாம் கண்டிப்பாக தங்கம் வெல்வோம் என்று பலர் கருத்து தெரவித்திருந்தனர்.

    இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை இணையமைச்சர் அவருடைய ட்விட்டரில், சீனவாச கவுடாவிற்கு இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் முறையான பயிற்சி கொடுப்பார்கள். ஒலிம்பிக் குறித்த எண்ணமும் ஆக்கமும் பற்றாக்குறையாக உள்ளது. குறிப்பாக தடகள போட்டியில் அது உள்ளது. இந்தியாவில் திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்பதில் நான் உறுதி அளிக்கிறேன் என்றுள்ளார்.



    மேலும் சீனிவாச கவுடாவிற்கு டிக்கெட் பதிவு செய்யப்பட்டுவிட்டது. அவருக்கு வரும் திங்கட்கிழமை முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தேசிய பயிற்சியாளர்கள் அவருக்கு பயிற்சி வழங்குபவர்கள் என்றும் தெரவித்துள்ளார்.

    இதன் மூலம் சீனிவாச கவுடா முறையான பயிற்சி பெற்று அவரது திறமை ஒலிம்பிக்கில் பிரதிபலிக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: