Home /News /sports /

தென் ஆப்ரிக்கா டி20 லீக்.. அணியை வாங்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்

தென் ஆப்ரிக்கா டி20 லீக்.. அணியை வாங்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்

தென் ஆப்ரிக்க டி20 கிரிக்கெட்

தென் ஆப்ரிக்க டி20 கிரிக்கெட்

ரிலையன்ஸ் குழுமத்திற்குள் புதிய டி20 அணியை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர்  திருமதி நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார்.

    தென்னாப்பிரிக்க டி20 லீக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தடம் பதிக்கவுள்ளது. ஆம், இந்த டி20 லீக் போட்டிக்கான அணியை வாங்கவுள்ளதாக ரிலையன்ஸ்  இண்டஸ்ட்ரீஸ்  அறிவித்துள்ளது.

    கிரிக்கெட் போட்டிகள் டெஸ்ட் தொடர், ஒருநாள் போட்டிகள் என்பதை தாண்டி தற்போது டி20 போட்டியாக பரிணமித்துள்ளது. உலகம் முழுவதும் டி20 போட்டிக்கான ரசிகர்கள் பல கோடி பேர் உள்ளனர். டி20 போட்டியை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் கவுன்சில் முன்னோடியாக ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

    இதையடுத்து பல்வேறு நாடுகளும் டி20 லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் புதிய டி20 லீக்கை நடத்தவுள்ளது. அடுத்த ஆண்டு இந்த லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான ஒரு அணியை வாங்கவுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது. இந்த புதிய அணி மும்பை இந்தியன்ஸ் என்ற பிராண்டை மேலும் முன்னெடுத்து செல்லும் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

    கிரிக்கெட் அணியின் உரிமை, இந்திய ஃபுட்பால் லீக் விளையாட்டு ஸ்பான்சர்ஷிப், ஆலோசனை, மற்றும் தடகள திறமை மேலாண்மை, மற்றும் துறையில் சிறந்த நடைமுறைகளை கொண்டு விளையாட்டு சூழலை மேம்படுத்துவதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முக்கிய பங்காற்றி வருகிறது.  RIL இன் CSR பிரிவான ரிலையன்ஸ் ஃபவுண்டேசன் ஸ்போர்ட்ஸ் இந்தியாவின் ஒலிம்பிக் இயக்கத்தை வழிநடத்தி வருகிறது. இதற்காக விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறூ வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், மதிப்புமிக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தை இந்தியாவில்  2023ம் ஆண்டில் நடத்துவதற்கான முயற்சியை திருமதி நீட்டா அம்பானி வெற்றிகரமாக நடத்தி காட்டினார்.

    தென் ஆப்ரிக்க டி20 லீக் போட்டிக்கான அணியை வாங்கவுள்ளது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர்  திருமதி நீட்டா அம்பானி கூறுகையில், ரிலையன்ஸ் குழுமத்திற்குள் புதிய டி20 அணியை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.  பயமற்ற மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த மும்பை இண்டியன்ஸ் பிராண்டை  இந்தியாவை போன்றே கிரிக்கெட் போட்டிகளை நேசிக்கும் தேசமான தென் ஆப்ரிக்காவுக்கு எடுத்து செல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    தென்னாப்பிரிக்கா ஒரு வலுவான விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது, இந்த கூட்டணியின் திறன் மற்றும் ஆற்றலை காண ஆர்வமாக இருக்கிறோம்.  மும்பை இண்டியன்ஸ் அணியின் கால் தடத்தை உலகளவில்  இடம்பெற செய்வதன் மூலம்
    விளையாட்டின் மூலம் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பரப்புவதில் உறுதியாக இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

    ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், தென் ஆப்ரிக்க அணியுடன் சேர்த்து உலகவில் தற்போது 3 நாடுகளில் 3 அணிகளை நாங்கள் கொண்டுள்ளோம். கிரிக்கெட் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மும்பை இண்டியன்ஸ் பிராண்டில் எங்கள் நிபுணத்துவம் மற்றும் அறிவு ஆகியவற்றை புகுத்தவும்  ரசிகர்களுக்கு சில சிறந்த கிரிக்கெட் அனுபவங்களை வழங்கவும் எதிர்நோக்குகிறோம்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பற்றி:
    ரிலையன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமாகும். 21 மார்ச் 2022ல் முடிந்த நிதியாண்டின்படி, இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 792,756 கோடி ரூபாய், லாபம்  110,778 கோடி ரூபாய். ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி, பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல்,
    பெட்ரோ கெமிக்கல்ஸ், சில்லறை மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருகிறது.

    ஃபார்ச்சூனின் குளோபல் 500 பட்டியலில் இந்தியாவில் இருந்து முதலிடம் பிடித்த நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகும். உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள்". ஃபோர்ப்ஸ் குளோபல் 2000 இல் ரிலையன்ஸ் நிறுவனம் 53 வது இடத்தில் உள்ளது.
    2022 ஆம் ஆண்டிற்கான "உலகின் மிகப் பெரிய பொது நிறுவனங்களின்" தரவரிசையில் இந்திய நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ளது.   LinkedIn இன் ‘இந்தியாவில் பணியாற்றுவதற்கான சிறந்த நிறுவனங்களில்’ (2021) இந்நிறுவனம் இடம்பெற்றுள்ளது.  இடம்பெற்றுள்ளது
    Published by:Murugesh M
    First published:

    Tags: Reliance, T20

    அடுத்த செய்தி