ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் யுஏஇ டி20 லீகில் ஒரு அணியை வாங்கி களமிறக்கவுள்ளது. எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் புதியதோர் டி20 லீக் தனியார் கிரிக்கெட்டை தொடங்கவிருப்பதில் ரிலையன்ஸ் ஓர் அணியை வாங்கி முதன் முதலாக அயல்நாட்டு லீக் ஒன்றில் கால்பதிக்கிறது.
இந்த கிரிக்கெட் வர்த்தகத்தில் இப்போது ரிலையன்ஸ் வசம் 2 அணிகள் உள்ளன. இதோடு ஸ்பான்சர்ஷிப், கன்சல்டன்சி, ஒளிபரப்பு, மற்றும் திறன் மேலாண்மை ஆகிய கிரிக்கெட் தொடர்பான வர்த்தகத்திலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு சிஎஸ்கேவுடன் சேர்ந்து ஒரு பெரிய பிராண்டாக உருப்பெற்றுள்ளது.
யுஏஇ டி20 லீகில் ரிலையன்ஸின் நுழைவு அந்த லீகுக்கும், யுஏஇ கிரிக்கெட் வாரியத்துக்கும் பெரிய வளங்களைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸின் சக உரிமையாளர் நிதா அம்பானி இது தொடர்பாகக் கூறும்போது, “பெரும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயமற்ற கிரிக்கெட் ரகத்தை புதிய புவியியல் இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். இந்தியா, மற்றும் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களுக்கு நன்றி.
Also Read: அந்த சிங்கிளுக்கு புஜாரா ஓடிவந்திருந்தால் ஷுப்மன் கில் ஆட்டமிழந்திருக்க மாட்டார்
எங்கள் கிரிக்கெட் நடவடிக்கைகளின் இதயமாக மும்பை இந்தியன்ஸ் இருக்கும் பட்சத்தில் யுஏஇ சந்தையும் பெரிய ஈர்ப்பாக உள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் இளம் திறமைகளை வளர்த்தெடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, என்றார்.
Also Read: அடுத்த 3 சீசனில் சிஎஸ்கே அணியில் தோனி... தக்கவைக்கப்படும் மற்ற வீரர்கள் யார்?
முதலில் சில தொடர்களில் யுஏஇ டி20 லீகில் 6 அணிகள் மோதும். 34 போட்டிகள் நடைபெறும். இந்த லீகில் பெரிய வீரர்கள் பலர் ஆடுகின்றனர். யுஏஇ டி20 லீகில் ரிலையன்ஸ் அணி இணைவதன் மூலம் இன்னும் சிலபல அபார அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.