Home /News /sports /

Deepika kumari | பழங்குடியின குடும்பத்தில் பிறந்த வீராங்கனை தீபிகா குமாரியின் சாதனை கதை..

Deepika kumari | பழங்குடியின குடும்பத்தில் பிறந்த வீராங்கனை தீபிகா குமாரியின் சாதனை கதை..

Youtube Video

பழங்குடியின குடும்பத்தில் பிறந்த வில் வித்தை வீராங்கனை தீபிகா குமாரி விளையாட்டு உலகே வியக்கும் வகையில் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கங்களை வெல்ல உதவியதுடன் மீண்டும் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார், அவர் சாதனைக் கதையை தற்போது பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  தீபிகா குமாரியின் வில்லில் இருந்து பாயும் அம்புகளின் குறி தப்புவது அரிது. உலக வில்வித்தை விளையாட்டரங்கில் எதிரிகள் அஞ்சும் போராட்டக்காரி. உலகின் Fashion தலைநகரான விளங்கும் பாரிசில் 3 தங்கப்பதக்கங்களை அண்மையில் அறுவடை செய்துள்ளார் பழங்குடியின பெண் தீபிகா குமாரி.

  தீபிகா குமாரி,.. வளர்ச்சியில் பின்தங்கிய ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராட்டு கிராமத்தில் பழங்குடியின குடும்பத்தில் பிறந்தவர். ஜார்க்கண்ட் என்றதும் நமக்கு நம்ம தல தோனிதான் நினைவுக்கு வருவார். ஆனால் தோனி போலவோ, சானியா மிர்சா, பிவி சிந்து போலவோ கோடிகளைக் குவிக்காவிட்டாலும் அவர்களுக்கு சற்றும் சளைத்தவரில்லை தீபிகா குமாரி.

  சாதாரண ஆட்டோ டிரைவரின் மகளான தீபிகா 3 வேளை உணவு கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக பழங்குடியின விளையாட்டுப் பயிற்சி அகாடெமியில் 12 வயதில் சேர்ந்தார். ஆனால் எட்ட முடியாத உயரத்தை எட்டவேண்டும் என்று எண்ணம் மட்டும் மனதினுள் கனன்று கொண்டிருந்தது. சில மாதங்கள் வாய்ப்பு அளித்தால் வில்வித்தையில் சாதித்துக் காட்டுவதாக உறுதி அளித்தார். அவர் கையில் மூங்கிலால் செய்யப்பட்ட வில் அம்புகள்தான் முதலில் தரப்பட்டன. சொன்னபடியே ஜொலித்ததால் ஜம்ஷெட்பூரில் உள்ள டாடா வில்வித்தை அகாடமி தீபிகாவை வரவேற்றது. அது முதல் ஏறுமுகம்தான்.

  2012-ல் தனது 18 வயதிலேயே உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தப் பிடித்தார். 2006 முதல் தற்போது வரை உலக்கோப்பையில் 12 வெள்ளி மற்றும் 7 வெண்கல பதக்கங்களை வசமாக்கியுள்ளார். 2010 காமன்வெல்த் போட்டி மற்றும் 2013 ஆசிய சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.  தற்போது உலகக் கோப்பை ஸ்டேஜ் 3-ல் தனியாக ஒரு தங்கமும், கடந்த ஆண்டு கரம்பிடித்த கணவர் அதனு தாசுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் ஒன்றும், மகளிர் குழுப் பிரிவில் ஒன்றுமாக 3 தங்கங்களை இந்தியா குவிக்க காரணமாய் இருந்துள்ளார் தீபிகா.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இவரது வெற்றிகளை மெச்சிய மத்திய அரசு அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவரவித்துள்ளது. 27 வயதான தீபிகா குமாரி தகர்க்காத இலக்குகளே இல்லை என்றாலும் நழுவும் மாங்கனியாக இருக்கிறது ஒலிம்பிக் பதக்கம். தற்போது உச்சக்கட்ட பார்மில் இருக்கும் தீபிகா, சிறு வயதில் மாங்கனிகளை கல்லால் குறி தவறாது வீழ்த்தியதைப்போல் டோக்யோ ஒலிம்பிக்கிலும் இலக்கை துல்லியமாக துளைக்கப்போவது உறுதி என்கின்றர் வல்லுனர்கள். இவர் தங்கப்பதக்கத்தை சூடுவதைக் காண தேசமே ஆவலுடன் காத்திருக்கிறது.
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Paris

  அடுத்த செய்தி