முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா பாதிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா பாதிப்பு

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றவுள்ளது. இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவி சாஸ்திரியுடன் பயிற்சியில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பி.அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பயோ BUBBLE பாதுகாப்பில் இருந்தும் இந்திய வீரர்கள் ரிஷப் பந்த், அக்சார் படேல், வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரவி சாஸ்திரிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளதால், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் கடைசி நாள் போட்டி, திங்கட்கிழமை திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இலங்கை சுற்றுப்பயணத்தின் போது குருணால் பாண்ட்யா, சஹால், கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, இந்திய அணியில் எட்டு வீரர்கள் டி20 ஆட்டங்களை தவறவிட்டனர்.

First published:

Tags: CoronaVirus, Ravi Shastri