ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

17வயது சிறுமி அளித்த பாலியல் புகாரில் விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் அதிரடி கைது

17வயது சிறுமி அளித்த பாலியல் புகாரில் விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் அதிரடி கைது

சந்தீப் லாமிச்சானே

சந்தீப் லாமிச்சானே

பாலியல் வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று நேபாள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி அளித்த புகாரில் நண்பர் ஒருவர் மூலம் கிரிக்கெட் வீரர் சந்தீப்பின் அறிமுகம் கிடைத்ததாகவும், இதனை அடுத்து ஆகஸ்ட் 21ம் தேதி காத்மாண்டு ஹோட்டல் ஒன்றில் தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காத்மாண்டு காவல்துறையிடம் புகார் அளித்தார்.

  இதனையடுத்து சந்தீப் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இதனை அடுத்து சந்தீப்க்கு காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீதான விசாரணை முடிவும் வரை நேபாள கிரிக்கெட் வாரியம் அவருக்கு கிரிக்கெட் விளையாட தடை விதித்தது. இந்த நிலையில் கரபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று நாடு திரும்பப்படும் போது கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

  Also Read: பும்ராவிற்கு பதில் மாற்று வீரர் யார்? குழப்பத்தில் இருக்கும் இந்திய அணியில் இடம் பிடிக்கபோவது யார்? ஒர் அலசல்

  இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் தான் நேபாளம் திரும்பி விடுவேன் என்றும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் எனவும் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க சட்டப் போராட்டம் நடத்துவேன் என சந்தீப் கூறியிருந்தார்.

  இதனையடுத்து நேபாள அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று காலை காத்மாண்டு விமான நிலையத்தில் வந்தபோது அவரை நேபாள காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நேபாளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நேபாள கிரிக்கெட் அணிக்காக சந்தீப் லமிச்சனே, இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளர். மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Cricket, Cricketer, Nepal