#5MinuteAur: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரின் புதிய சவால்! (வீடியோ)

Rajyavardhan Rathore's Brand New #5MinuteAur Challenge | கடந்த ஆண்டு நாடு முழுவதும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் ‘ஃபிட்னஸ் சேலஞ்ச்’ விடப்பட்டது.

news18
Updated: January 9, 2019, 2:48 PM IST
#5MinuteAur: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரின் புதிய சவால்! (வீடியோ)
ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர்.
news18
Updated: January 9, 2019, 2:48 PM IST
ஃபிட்னஸ் சேலஞ்ச் போல 5 நிமிடங்கள் அதிகமாக விளையாடுங்கள் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் புதிய சவாலைத் தொடங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில், சமூக வலைத்தளங்கள் மூலம் ‘ஃபிட்னஸ் சேலஞ்ச்’ விடப்பட்டது. கடந்த மே மாதம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்வர்த்தன் சிங் ரத்தோர் ஃபிட்னஸ் சேலஞ்சை தொடங்கி வைத்தார்.

Rajyavardhan Singh Rathore, Fitness Challenge
‘ஃபிட்னஸ் சேலஞ்ச்’ விடுத்த ரத்தோர். (Twitter)


தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு, விராட் கோலி, சாய்னா நேவால் உள்ளிட்டோருக்கு இந்த சவாலை விடுக்கிறேன் என அவர் கூறியிருந்தார்.
Loading...






அதனைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது ‘ஃபிட்னஸ் சேலஞ்ச்’ வீடியோவை வெளியிட்டனர். இது மிகப்பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்தது.










இந்நிலையில், அதேபோன்று #5MinuteAur என்ற பெயரில் மீண்டும் ஒரு புதிய சவாலை ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தொடங்கியுள்ளார். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் டேபிள் டென்னிஸ் விளையாடுவது போன்ற வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், “நாம் சிறுவயதில் இருக்கும்போது விளையாடச் செல்வோம். நமது அம்மா - அப்பா, வீட்டுப்பாடம் இருக்கிறது என்பார்கள். அப்போது, நாம் 5 நிமிடங்கள் மட்டும் விளையாடுகிறேன் எனக் கூறுவோம்.

அந்தக் காலகட்டத்தில் நமக்காக யாரும் பேசவில்லை. ஆனால், இப்போது அனைத்து இந்தியக் குழந்தைகளின் குரலாக நாம் ஒலிப்போம். நீங்களும் இதுபோன்று விளையாடி வீடியோவை பகிருங்கள்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



‘ஃபிட்னஸ் சேலஞ்ச்’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து புதிய சாவலுக்கும் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சிட்னி வந்து சேர்ந்தது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி!

Also See..

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...