Rahul Tewatia : ராஜஸ்தான் அணி வீரர் ராகுல் டிவாட்டியாவின் லவ் ப்ரபோஸ் - வைரல் வீடியோ

ராஜஸ்தான் அணி வீரர் ராகுல் டிவாட்டியா

ராகுல் டிவாட்டியாவின் லவ் ப்ரபோஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லரின் மகள் ஜார்ஜியாவிற்கு சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஜார்ஜியாவின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு, ராஜஸ்தான் அணியை சேர்ந்த வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு விருந்தை ஏற்பாடு செய்தனர். அதில் வேடிக்கையான சில விளையாட்டுகளும் நடத்தினர். வீரர்கள் மற்றும் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். அப்போது அனைவரும் வட்ட வடிவ மேசையை சுற்றி அமர்ந்திருந்தனர்.

விளையாட்டின் விதிப்படி, குழு உறுப்பினர்கள் ஒரு தலையணை அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளை தங்களுக்கு பக்கத்தில் இருக்கும் நபருக்கு அனுப்புவார்கள், அப்போது இசை ஒலிக்கப்படும், திடீரென இசை நிறுத்தப்படும் போது யார் கையில் அந்த பொருள் இருக்கிறதோ, அவர்கள் ஒரு பாட்டிலில் இருக்கும் துண்டு சீட்டுகளில் இருந்து ஒன்றை எடுக்க வேண்டும். மேலும் அவர் அதில் இருக்கும் வேடிக்கையான நிகழ்வை செய்து காட்ட வேண்டும்.

இந்த விளையாட்டின் போது, ​​இசை நிறுத்தப்பட்ட நிலையில் ராகுல் டிவாட்டியோவின் கையில் பொருள் இருந்தது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்த ஒரு சீட்டைத் தேர்ந்தெடுத்தார். அதில் தண்ணீர் பாட்டிலை எடுத்து லவ் ப்ரபோஸ் செய்ய வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.

 

  

இதனை பார்த்த அவரது அணியினர் கிண்டல் செய்தனர். லவ் ப்ரபோஸ் செய்வதற்கு முன்பு டிவாட்டியா தனது அணியினரிடம் ஆலோசனை கேட்டார். சில விநாடிகள் தயங்கியபின், டிவாட்டியா தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து, "நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், நான் உன்னை நேசிக்கிறேன்" என்று பாட்டில்-க்கு முத்தம் கொடுத்தவாறு டிவாட்டியா கூறினார்.

ALSO READ : 2008-லிருந்து இவர்கள் சம்பாதிக்காததா? ஓர் ஆண்டு சம்பாதிக்கா விட்டால் குடியா மூழ்கி விடும்: ஐபிஎல் குறித்து ஷோயப் அக்தர்

முழங்கால் போட்டு பாட்டிலை முத்தமிட்டதால், அவரது அணியினர் சிரிப்பலை கேட்கிறது. மேலும் என்ன திருமணம் செய்து கொள்வாயா என்றும் அவர் வேடிக்கையாக கேட்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஹரியானாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான 27 வயதுடைய ராகுல் டிவாட்டியா, 2013ம் ஆண்டில் முதல் தர வரிசையாக கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடிய டிவாட்டியா, பெரிதும் பிரபலமாகாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஏராளமானோர் இவர் யார்? என தேடும் அளவிற்கு விளையாடினார். ஐபிஎல் 2020ன் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேனான ராகுல் டிவாட்டியோ 6 பந்துகளில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை விளாசி மொத்த ஆட்டத்தை மாற்றியதை அடுத்து, ஒரே இரவில் இணையத்தில் பிரபலமானார்.

ALSO READ : மகளை கொஞ்சும் தோனி - இன்ஸ்டாகிராமில் வைரல் புகைப்படம்!

ஐபிஎல் 2021ல் சுமாராண ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இதில் 86 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் வீதம் 128.35 ஆக உள்ளது. அவர் ஏழு ஆட்டங்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி 9.75 என்ற எக்கனாமி வீதத்தில் இருக்கிறார். தற்போது கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் அட்டவணையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: