Home /News /sports /

21-வது கிராண்ட்ஸ்லாம்: புதிய வரலாற்றைப் படைத்த ரஃபேல் நடால்

21-வது கிராண்ட்ஸ்லாம்: புதிய வரலாற்றைப் படைத்த ரஃபேல் நடால்

ரஃபேல் நடால்

ரஃபேல் நடால்

டென்னிஸ் போட்டியில் 21-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று ரஃபேல் நடால் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், மெல்போர்னில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இறுதிப் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த டேனில் மெட்வெடேவ்வும் ,ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடாலும் மோதினர்.

    பரபரப்பான இந்த போட்டியில், முதல் மற்றும் இரண்டாவது செட்டை மெட்வடேவ் கைப்பற்றினார். அதனால், நடாலின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால், தோல்வியிலிருந்து மீண்ட நடால், மூன்றாவது மற்றும் நான்காவது செட்களைக் கைப்பற்றினார். இதனால் சாம்பியன் ஆகப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஐந்தாவது செட் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

    அதனால், இறுதி செட் போட்டி எதிர்பார்ப்பின் உச்சத்துக்கு சென்றது. இந்நிலையில், 5வது செட்டை 7-5 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ரஃபேல் நடால்.

    நான் நம்பிக்கையுடன் அடிக்கும் ஷாட், இந்தியாவுக்கு எதிராக தவறாகிப் போனதே: மிஸ்பா உல் ஹக் வேதனை



    5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இறுதி போட்டியில், அவர் 2-6, 6-7, 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெட்வடேவை நடால் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 21-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் நடால். இதுவரையில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர், செர்பியன் நாட்டைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிக், ரஃபேல் நடால் ஆகியோர் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது, ரோஜர் பெடரரின் சாதனையை நடால் தாண்டி புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Rafael Nadal

    அடுத்த செய்தி