ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

14வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்!

14வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்!

பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றி சம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்!

பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றி சம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்!

பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் நார்வே வீரரான 23 வயதான காஸ்பர் ரூட்டை தோற்கடித்து, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தனது 14வது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நார்வே வீரர் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி, 14வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றி அசத்தினார் ரபேல் நடால். இதன் மூலம் பிரெஞ்சு ஓபனில் அதிக முறை பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் நார்வே வீரரான 23 வயதான காஸ்பர் ரூட்டை தோற்கடித்து, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தனது 14வது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 8ஆம் நிலை வீரரான காஸ்பர் ரூட்டை 6-3, 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார்.  

பிரெஞ்சு ஓபன் வென்ற மிக வயதான வீரராக ஆண்ட்ரெஸ் கிமெனோ 1972 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தார். 34 ஆண்டுகள் 305 நாட்களில் பிரெஞ்ச் ஓபனை அவர் வென்று இருந்தார். இன்று 36 வயதான நடால் பிரெஞ்சு ஓபனை வென்றதன் மூலம் ஆண்ட்ரெஸ் சாதனையை ரஃபேல் நடால் முறியடித்தார்.

ஒரே சீசனில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் பட்டங்களை நடால் கைப்பற்றுவது இதுவே முதல் முறை.  இந்த பிரெஞ்சு ஓபனை வென்றதன் மூலம், நடால் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. இவருக்கு அடுத்த இடத்தில் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் சம நிலையில் உள்ளனர்.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அவர் பட்டம் வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Rafael Nadal