உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ரபேல் நடால் போட்டியின் போது தான் அடித்த பந்தால் தாக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றில் நடால், அர்ஜெண்டினாவின் ஃபெடரிகோ டெல்போனிஸை எதிர்த்து விளையாடினார். அப்பொது நடால் அடித்த பந்து டென்னில் அரங்கில் இருந்த ‘பால் கேர்ள்’ ஒருவரை கடுமையாக தாக்கியது. உடனே அடிப்பட்ட சிறுமியின் அருகில் சென்று, அவரை நலம் விசாரித்தார் நடால்.
பொதுவாக டென்னிஸ் போட்டிகளின் போது, இதுபோன்று சிறுவர்களோ, சிறுமிகளோ வீரர்கள் அடிக்கும் பந்தை எடுத்துப் போடாவும், அவர்களுக்கு உதவி செய்யவும் நியமிக்கப்பட்டிருப்பார்கள். பெரும்பாலும் அவர்களும் டென்னிஸ் கற்றுக்கொள்ளும் நபர்களாகவே இருப்பார்கள். காரணம் இதுப் போன்ற வளரும் சிறுவர், சிறுமிகள் நட்சத்திர ஆட்டக்காரர்களின் ஆட்டத்தை அருகிலிருந்து பார்க்கும்போது, அது அவர்களுக்கு பிறகாலத்தில் உதவும் என்பதே. அவ்வாறு நியமிக்கப்படும் சிறுவர், சிறுமிகளே ‘பால் பாய்ஸ்’ அல்லது ‘பால் கேர்ள்ஸ்’ என்றழைக்கப்படுவது வழக்கம்.
அதுப்போன்ற செயல்பட்ட ஒரு சிறுமியை தான் நடால் அடித்த பந்து தாக்கியது. தாக்கப்பட்ட சிறுமியின் பெயர் அனிட்டா என்பது பின்னர் தெரியவந்தது. இந்ந்நிலையில் சமீபத்தில் அந்தச் சிறுமியை, அவரது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்தது நலம் விசாரித்துள்ளார் நடால். பின்னர் அவருடன் ஒரு செல்பியும் எடுத்துக்கொண்டார்.
பின்னர், அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ’அனிட்டாவை அவரது குடும்பத்தினருடன் சந்தித்தேன். களத்தில் நடந்த அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் நலமுடன் உள்ளார் என்பதை உறுதிசெய்து கொண்டதில் நிம்மதி. அனிட்டா ஒரு தைரியமான சிறுமி’ எனக் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அந்தச் சிறுமிக்கு தன் கையொப்பமிட்ட தொப்பி ஒன்றையும் பரிசளித்துள்ளார் அவர்.
சிறுமி தவறுதலாக தாக்கப்பட்டதும் துரிதமாக நடால் செயல்பட்டதும். பின்னர் களத்திற்கு வெளியே அவர்களை நேரில் சந்தித்ததும் ஒரு நல்ல முன்னுதாரணம் என சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்களும், டென்னிஸ் பிரியர்களும் அவரை கொண்டாடிவருகின்றனர். நடால் களத்தில் மட்டுமல்ல வெளியிலும் சாம்பியன் தான் என்பதை நிரூபித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.