அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், தரநிலையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஐந்தாவது இடம் வகிக்கும் ரஷியாவின் டேனில் மேத்வதேவ்வுடன் மோதினார். ஆரம்பத்தில், நடாலின் கையே ஓங்கியிருந்ததால் முதல் 2 செட்களை கைப்பற்றினார். பின்னர், கடும் சவால் அளிக்கும் வகையில் ஆடிய மெத்வதேவ், அடுத்த 2 செட்களையும் வசப்படுத்தி சமநிலையை எட்டினார்.
இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க கூடிய கடைசி செட்டில் அனல் பறந்தது. இருந்த போதும் நடால், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி நேர்த்தியாக விளையாடினார். இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் மெத்வதேவ் திணறினார்.5 மணி நேரமாக நடந்த போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவை 7-5, 6-3,5-7,4-6 6-4.6 என்ற செட் கணக்கில் போராடி வென்றார் நடேல்.
4-வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தையும், 19-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றுள்ளார் ரஃபேல் நடால்.
Also watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rafael Nadal