முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்... வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்... வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

பி.வி.சிந்து

பி.வி.சிந்து

ஜப்பானின் அகனே யமகுஷியுடன் இறுதிபோட்டியில் இன்று மோதினார் இந்தியாவின் பி.வி.சிந்து  

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து.

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் சீனாவின் சென் யூவை 21-19, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதையடுத்து பி.வி.சிந்து ஜப்பானின் அகனே யமகுஷியுடன் இறுதிபோட்டியில் இன்று மோதினார்.

முதல் சுற்றில் ஜப்பானின் அகனே அகனே யமகுஷி 21-15 என்ற செட் கணக்கில் வென்றார். இரண்டாவது சுற்றில் எப்படியாவது வெற்றியடைய வேண்டும் போராடினார் பி.வி.சிந்து. ஆனால் 21-16 என்ற செட் கணக்கில் மீண்டும் தோல்வியடைந்தார் பி.வி.சிந்து.

தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

Also watch

First published:

Tags: Badminton, PV Sindhu