முகப்பு /செய்தி /விளையாட்டு / பிரிகிறது 4 ஆண்டு வெற்றிக் கூட்டணி.. பிவி சிந்து எடுத்த அதிர்ச்சி முடிவு.!

பிரிகிறது 4 ஆண்டு வெற்றிக் கூட்டணி.. பிவி சிந்து எடுத்த அதிர்ச்சி முடிவு.!

பிவி சிந்து

பிவி சிந்து

இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து தனக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க உள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Hyderabad, India

இந்திய விளையாட்டு உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராக விளங்குபவர் பிவி சிந்து. அடுத்தடுத்து ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற மகத்தான சாதனை படைத்த சிந்து காயம் காரணமாக பல மாதங்கள் விளையாடவில்லை. காயத்தில் இருந்து மீண்ட பின்னர் தற்போது மீண்டும் விளையாட தொடங்கிய சிந்து, சமீபத்திய போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்.

டென்னிஸ் போட்டி போன்று பேட்மின்டன் வீரர், வீராங்கனைகளும் தங்களுக்கு என பிரத்யேகமாக பயிற்சியாளர்களை நியிமித்துக் கொள்வர்.  அந்த வகையில், நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, கடந்த 2019-ம் ஆண்டு தென்கொரியாவை சேர்ந்த பார்க் டே சாங் (Park Tae Sang) என்பவரை தனது பயிற்சியாளராக நியமித்தார்.

இவரின் வழி காட்டுதலில், சர்வதேச போட்டிகளில் சையது மோடி, சுவிஸ் ஓபன், சிங்கப்பூர் ஓபன் ஆகிய 3 பட்டங்களை வென்றார். அத்துடன், பர்மிங்ஹாம் காமன்வெல்த்தில் தங்கப் பதக்கமும், டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதித்தார். ஆனால், அண்மைக் காலமாக சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.




 




View this post on Instagram





 

A post shared by PARK TAESANG (@taesang2734)



இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்க் டே சாங், முன்பு போல் சிந்துவால் வெற்றியை குவிக்க முடியவில்லை எனவும், அவரது சறுக்கலுக்கு பயிற்சியாளர் என்ற முறையில் தான் பொறுப்பேற்பதாகவும் தெரிவித்தார். மேலும், புதிய பயிற்சியாளரை நியமிக்கும் முடிவை சிந்து தன்னிடம் கூறியதாகவும், அதற்கு தான் மதிப்பளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Badminton, PV Sindhu