அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனைகள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர்

அதிக வருவாய் ஈட்டும்  வீராங்கனைகள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர்
பிவி சிந்து
  • Share this:
உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனை பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்தியராக பி.வி.சிந்து இடம்பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள அதிக வருவாய் ஈட்டும் 15 வீராங்கனைகள் பட்டியலில் பி.வி.சிந்து 13வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அவரது ஆண்டு வருவாய் ரூ.39 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. விளம்பரங்கள் மூலமாக ரூ.35 கோடியும், இந்திய அணியின் ஊதியம் மற்றும் போட்டிகளில் வென்ற பரிசுத்தொகை 4 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச அளவில் அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனையாக அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் நான்காவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். இவரது ஆண்டு வருவாய் 207 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானின் நவோமி ஒஸாகா 2வது இடத்திலும், ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 3வது இடத்திலும் உள்ளனர். முதல் 15 இடத்தை பிடித்த வீராங்கனைகளில் 11 பேர் டென்னிஸ் விளையாட்டில் உள்ளவர்கள்.

Also Read : #INDvWI: பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் விராட் கோலிAlso Read : ரஞ்சி கிரிக்கெட் தொடரில் லடாக் வீரர்களின் நிலை என்ன? பிசிசிஐ அறிவிப்பு
First published: August 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading